புறநானூற்றில் ஒரு பாடல் மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடியது. முரசு இல்லாதபோது அதை வைக்கும் கட்டிலில் அறியாமல் புலவர் களைப்பில் தூங்கிவிட அவருக்கு மன்னர் தண்டனை அளிக்காமல் அருகில் நின்று கவரி வீசியதைப் பற்றியது.
ஞானக்கூத்தனின் கவிதை இந்நிகழ்ச்சியை அங்கதச் சுவையுடன் கூறுகிறது:
தோழர் மோசிகீரனார்
மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்
ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்
***************
இன்றைய வெடி:
உடலின் ஒரு பகுதி தண்ணீர்த் துளி கொண்டிருப்பதைப் பற்றிய கேலி? (5)
இதற்கான விடை: அங்கதம்
இங்கே செல்லவும்.
Comments