Skip to main content

விடை 3659

இன்று காலை வெளியிட்ட வெடி:
ஒரு மாதத்திற்குள் நகத்தின் முனை வெட்டி ரவா  சேர்த்தவர் பெங்களூர்க்காரராக இருக்கலாம் (6)
அதற்கான விடை: மாநகரவாசி = மாசி + நக (ம்)  + ரவா

இன்றைய புதிர்க்கு வந்த விடைகளை இங்கே சென்று காணுங்கள்:

https://docs.google.com/spreadsheets/d/1IUo9S2mjSfnGINC2JTbLabp1MsDiHdtq8l8haOS4K6g/edit?usp=sharing
புதியதாக புதிர்ப்பக்கம் வருபவர்களுக்கு:
 இங்கு தினம் காலையில் 6 மணியளவில் (பெரும்பாலும் 6.15க்குள்)
புதிர் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அதற்கான விடையைப்  புதிரின் கீழுள்ள படிவத்தில் பெயரோடு  அளிக்கலாம். தவறென்று பின்னர் தோன்றினால் மீண்டும் வேறு விடையை எத்தனை முறையும் வந்து மாற்றியளிக்கலாம்.

இரவு 9 மணியளவில் விடையும் அளிக்கப்பட்ட எல்லாவிடைகளும் (சரியோ, தவறோ) காலவரிசைப்படி  வெளியிடப்படும். புதிர் பற்றிய கருத்துகளை விவாதங்களை இரவு 9 மணி விடை தெரிவிக்கும் பகுதியில் இடுவது நல்லது.

பழைய புதிர்களைத் தோண்டியெடுக்க பொதுவாக "தேடு" என்ற இடத்தில் வரிசை எண்ணை (3150 லிருந்து  ஏதாவது ஓர் எண்ணை இட்டுத் தேடலாம்).
உதாரணமாக " 3235   -விடை"  என்றால் 3235 வரிசை எண்ணுள்ள புதிர் (மட்டும்) வரும்.  வெறுமனே "3235" என்று இட்டால் புதிர்ப்பக்கமும் அதற்கான விடைப்பக்கமும் வந்துவிடும்!


அல்லது, 2018ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதப் புதிர்கள் வேண்டுமென்றால்
 http://udhirivedi.blogspot.in/2018/08

என்ற வலை முகவரியை  உலவியில் இட்டுப் பெறலாம்.
பழைய புதிர்களுக்கு விடையை இடுவது பயனற்றது. பட்டியல் அன்றன்றே வெளியிடப்படும். நானும் அவற்றை மறு நாளில் பார்ப்பதில்லை.



Comments

Raghavan MK said…
**********************
_ஒரு மாதத்திற்குள் நகத்தின் முனை வெட்டி ரவா சேர்த்தவர் பெங்களூர்க்காரராக இருக்கலாம் (6)_

_ஒரு மாதம்_
= *மாசி*

_நகத்தின் முனை வெட்டி_
= _நக (ம்)_
= *நக*

_ஒரு மாதத்திற்குள் நகத்தின் முனை வெட்டி ரவா  சேர்த்தவர்_
= *மாசி* க்குள் *நக* + *ரவா*
= *மா(நக + ரவா)சி*
= *மாநகரவாசி*

_பெங்களூர்க்காரராக இருக்கலாம்_
= _பெங்களூர் மாநகரத்தில் வசிப்பவர்_
= *மாநகரவாசி*
************************

*_மாசி மாத மகத்துவங்கள்_*
மாசி மாத மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன
Raghavan MK said…
*Blast from the past !!*

பிப்ரவரி 04, 2018

அன்று வெளியான  வெடி:

_ஒரு மாதத்திற்குள் கொஞ்சம் இடம் மாறிச் செல்ல அனுமதி கேட்பது சென்னைக்காரரோ? (6)_

இதற்கான விடை:  
=  மாசி + நகரவா (?)
*மாநகரவாசி*
Vanchinathan said…
This comment has been removed by the author.
Vanchinathan said…
ஆஹா! சென்னை பெங்களூராய் மாறியிருக்கிறது. கொஞ்சம் ரவா கலந்து கிட்டதட்ட அதே புதிரைப் பண்ணியிருக்கிரேன்.
நினைவுபடுத்தியதற்கு நன்றி.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்