இன்று காலை வெளியான வெடி:
முன்னுரை வெற்றி பெறாமல் உண்மையும் முழுதாக வரவில்லை (5)
இதற்கான விடை: தோற்றுவாய்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
முன்னுரை வெற்றி பெறாமல் உண்மையும் முழுதாக வரவில்லை (5)
இதற்கான விடை: தோற்றுவாய்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
*************************
*முன்னுரை* க்குத் தான் எத்தனை வேறுசொற்கள் உள்ளன!
முகவுரை, அணிந்துரை, புனைந்துரை,நூன்முகம், அறிமுகம், தொடக்கம், ஆரம்பம், பீடிகை, பாயிரம். இவையெல்லாவற்றையும் ஓரம்கட்டி *_தோற்றுவாயை_* முன்னிறுத்தி நம்மை முடிவுரை காண புதிரமைத்த ஆசிரியரின் முயற்சி ஓரளவு வெற்றி பெறாமல் போகவில்லை! 💐.
************************
_முன்னுரை வெற்றி பெறாமல் உண்மையும் முழுதாக வரவில்லை (5)_
_வெற்றி பெறாமல்_
= *தோற்று*
_உண்மை_
= *வாய்மை*
_உண்மையும் முழுதாக வரவில்லை_
= *வாய்* _~(மை~ )_
_முன்னுரை_
= *_தோற்று+வாய்_*
= *தோற்றுவாய்*
************************
_தோற்றுவாய்_
பெயர்ச்சொல்
உயர் வழக்கு
1.
(ஒன்றின்) ஆரம்பம்; துவக்கம்.
‘இந்த நீண்ட போராட்டத்தின் _தோற்றுவாயைத்_ தெரிந்துகொள்ள நாம் இருநூறு ஆண்டுகளுக்கு முன் செல்ல வேண்டும்’
2.
உயர் வழக்கு *(நூலின்) நுழைவாயிலாக இருக்கும் முன்பகுதி* .
************************
தோற்று தெரியும். வாய்மை --> வாய் கிடைத்தது. தோற்றுவாய் ன்னு சொல்லி கூட பார்த்தேன். இப்படி ஒரு சொல் இருப்பதே தெரியாதா? பெயிலு ....