இன்று காலை வெளியான வெடி:
அம்மாடி ஒன்றைவிட்டொன்று கழி சுழற்றித் தொடரும் (5)
அம்மாடி ஒன்றைவிட்டொன்று = ம் டி
கழி = நீக்கு
விடை: நீடிக்கும் (தொடரும்)
சென்னையில் ஒரு வாரமாகப் புயல் வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்று தொடங்கி மழை கொட்டப்போகிறது என்பதெல்ல்லாம் நடக்கவில்லை. இன்றைய விடையோடு , அது தொடர்பாக இவ்வெண்பா:
வாடிக் களைப்பூட்டும் வற்றவைக்கும் ஏரியினை
நீடிக்கும் இவ்வறட்சி நேற்றோ டொழியுமென்றார்.
பொய்யாகிப் போன புயலதால் கிட்டவில்லை
வெய்யிலில் பெய்யும் மழை.
இன்றைய வெடிக்கு வாசகர்கள் அளித்த விடைகளின் தொகுப்பை
இப்பக்கத்தில் காணலாம்.

Comments
_அம்மாடி ஒன்றுவிட்டொன்று கழி சுழற்றித் தொடரும் (5)_
_அம்மாடி ஒன்றுவிட்டொன்று_
= _(அ)ம்(மா)டி_
= *ம்டி*
_கழி_ = *நீக்கு*
_சுழற்றி_
= anagram of *நீக்கு+ம்டி*
= *நீடிக்கும்*
= _தொடரும்_
*************************
பிப்ரவரி 05, 2018
அன்று காலை வெளியான வெடி:
_நடராஜரிடம் ஒன்றுவிட்டொன்று சிலம்பு பரதம் ஆட்டம் (6)_
இதன் விடை :
*சிதம்பரம்*
_நடராஜர் (இருக்கும்) இடம்_
= *சிதம்பரம்*
சிலம்பு என்பதில் சி, ம் மற்றும் பரதம் சேர்ந்து "ஆடும்போது" சிதம்பரம் வரும்.
😄😄
ஆங்கிலத்தில் often, infrequently, sporadically, oddly, evenly, regularly போன்ற சொற்களை "ஒன்று விட்டு ஒன்று" குறியீடாகப் பயன் படுத்தி நம்மை படுத்தி எடுத்து விடுவார்கள்.
முடியதில் விட்டுவிட்டு வெட்டிய முனை (3)
மேலிடம் சூழ விட்டுவிட்டு கணவர் மனதில் தோன்றுவது (5)