Skip to main content

விடை 3663

இன்றைய வெடி:
முந்தானையா, ரவிக்கை ஓரத்தில் ஆண்கள் அணிந்து கொள்வது? (5)

இதற்கான விடை: தலைப்பாகை = தலைப்பா + கை

தலைப்பாகையால் ஒரு வசதி உண்டு, தலையில் எண்ணெய் தடவவோ,  படிய வாரிக் கொள்ளவோ அவசியமில்லை. அதைப் பற்றி ச் சிக்கனமாக மூன்றடி வெண்பா.

முந்தானை  பின்னாலே மோகித்துச்   செல்லாமல்
வந்தாராம் கைசேர்த்து   வாராத்  தலைமறைக்க 
இந்தப் புதிர்வழி இன்று.

விடையளித்தவர்கள் பட்டியலைப் பார்க்க  இதைச் சொடுக்கவும்.

ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடுகளில் குறுக்கெழுத்துப் புதிர்களை அளித்து வரும் சதுர்வாசி (Gridman) கோடை 2019 சரவெடி பற்றி அவருடைய  ஆழ்ந்த கருத்துகளை விவரமாக அளித்துள்ளார்.   இங்கே சென்று   கருத்துரைப் பகுதியில் அதைப் படிக்கலாம்.

அவரைப் போலவே ஹிந்து நாளேட்டிற்குப் புதிரளித்தும், IPL போன்று  IXL என்ற பெயர்கொண்ட ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டியில் கோப்பை வென்றவருமான ராம்கி கிருஷ்ணன்  உதிரிவெடிப் பக்கங்களுக்கு கடந்த பத்து நாட்களாக  அடிக்கடி வந்து  பங்கேற்று வருகிறார்.

அவர்கள் இருவருக்கும் நன்றி.

Comments

Raghavan MK said…

பாட்டியின் முந்தானை முடிச்சிலிருந்து
கையில் காசெடுத்து கடைவீதியில்
தலைப்பாக்கட்டு பிரியாணி
சாப்பிட சென்றான் என் பேரன்!😄
************************
_முந்தானையா, ரவிக்கை ஓரத்தில் ஆண்கள் அணிந்து கொள்வது? (5)_
_முந்தானையா ?_
= _(சேலை)_*தலைப்பா* ?
_ரவிக்கை ஓரம்_
= *கை*
_முந்தானையா ரவிக்கை ஓரத்தில்_
= *தலைப்பா+கை*
= *தலைப்பாகை*
= _ஆண்கள் அணிந்து கொள்வது_
*************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.