இதற்கு முன் கடைசியாகத் தென்றல் பத்திரிகைக்கு டிசம்பர் 2012 இல் சரவெடி செய்தேன். இதுவும் 2009இல் வந்த கட்டவலையிலிருந்து சிலவற்றை வைத்துக் கொண்டு பலவற்றை மாற்றி அமைத்தது.
சுமார் 230 சரவெடிகளை உருவாக்கிய பின்னர் நான்காண்டுகள் புதிர்களை நிறுத்திவிட்டு உதிரிவெடியாகச் செய்வது என்று தொடங்கினேன். (உதிரிவெடிக்கு வரிசை எண் 3000 த்திலிருந்து தொடங்கினேன். சரத்தையெல்லாம் சுமார் 14 உள்ளதாகக் கணக்கிட்டு)
வாசகர்களுக்கு உதிரிவெடிதான் சுவாரசியமாக இருக்கும் என்பது இந்த இரு பாணிகளையும் செய்த பிறகு தோன்றுகிறது. உதாரணமாக மூன்றெழுத்துச் சொற்கள் கட்டத்தில் முதலெழுத்தும் கடைசியெழுத்தும் மற்றதிலிருந்து வந்துவிடுவதால் யோசிக்காமல் விடை கிடைத்துச் சப்பென்றாகி விடும்.
எனவே நான் வலைக்கட்டப் புதிருக்கு அதிகம் செல்ல வேண்டாமென்று எண்ணுகிறேன். பார்ப்பதற்கு கட்டங்கள் நேர்த்தியாக கண்ணுக்கு அழகாக இருப்பது என்னவோ உண்மைதான். உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
*******************
2019 கோடைச் சரவெடிக்கான விடைகள் விளக்கத்துடன்:
குறுக்காக
1. முற்றுப் பெறா வானம் அடங்கி ஒரு மொழி தோன்றியது (5) உருவானது = உருது + வான (ம்)
4. வாளை வைக்க கரிகாலனுக்கு தலைநகரில் பாதி தேவைப்படும் ( 2)
உறை (யூர்)
6. பிரிக்க முடியாத நூல் பிணைப்பும் மாட்டும் (4) சிக்கும்
7. பெண் மரம் வெட்டி சாவு அவ்விடம் சூழ்ந்தது (4) அணங்கு = அங்கு + மரணம் -மரம்
9. புரட்டா வைகாசி தொடங்கி மார்கழியில் பாடப்படும் (5) திருப்பா+வை
12. மனைவி முதல் மாதம் இடை சூழ்ந்த மார்கழியில் பெய்வது (4) பத்தினி = பனி + (சி)த்தி(ரை)
14. பெண்பாதி கொண்ட ஆண்மகனே! கடவுளே! (4) ஆண்டவா = ஆடவா + (பெ) ண்
17. ஒட்டு ஒப்பானது (2) இணை
18. ஒரு செயலைத் தேர்ச்சியுடன் ஆனால் குழப்பமாகப் படம் திற (5) திறம்பட
நெடுக்காக
1. இதையடைந்தவர் மேலே செல்வதில்லை (3) உச்சி
2. செய்வேனென்ற கூற்று குழப்பத்தில் வழக்கு தொடர்ந்தவர் முனை வெட்டி நறுக்கு (5) வாக்குறுதி = வாதி + (ந) றுக்கு
3. கப்பல் புறப்படுமிடத்தில் முகமிழந்து பிரிவு (2)
4. சாப்பிடுவதற்கு அம்மா சென்றபின் உன் அண்ணனை . . . (3) உண்ண = உன் அண்ணனை - அன்னை
5. பொருத்தமான யானைப் பல்லாலான குதிரையின் தலையை விழுங்கு (4) தகுந்த = தந்த + கு
7. பெற்றவர், குற்றமற்றவர், விற்றவர், தலைவாங்கியவர் (3) அப்பா (வி)
8. பாக்மதிக் கரையில் இருக்கும் திருமணமான காளை! (4) பசுபதி (நேபாளத்துக் கோயிலில் இருக்கும் ஈஸ்வரன், பசுபதி; ராமனை சீதாபதி என்று கூறினால் காளையைப் பசுபதி எனலாமே!)
10. ராஜகுரு மானிடர்களிடம் கண்ட ஒரு மாவினம் (3) ருமானி
11. சிவலோகப் பதவியை விரும்பாத பக்தர்கள் செல்ல விழையுமிடம் (5)
வைகுண்டம் (புரியவில்லை என்றால் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் பற்றிப் படிக்கவும்)
13. இலக்கியத்தின் பிரிவு பாதி பெண்ணைச் சுற்றிடும் வீட்டின் பகுதி (3) திண்ணை = திணை + (பெ) ண்
15. வறுத்தெடுக்க மாட்டை விரட்டி ஆட்டவா சுழற்றவா? (3) வாட்ட = ஆட்டவா - ஆ
16. சுரத்தையிழந்த ஒரு வெடி வகையில் தோன்று (2) உதி = உதிரி - ரி
இந்தப் புதிருக்கு விடையளித்தவர்களின் பட்டியல் இதோ.
இப்பட்டியலைச் சீராக்கிப் பார்வைக்கு எளிதாக்க நேரம் கிடைக்கவில்லை. கொஞ்சம் எலியை மேலும் கீழும் ஓட்டியோ அல்லது தொலைபேசியில் விரலுக்கு பலமுறை வேலை கொடுத்தோ படிக்க வேண்டியிருக்கும். அதோடு இப்பட்டியலில் கிரீனிச் நேரப்படி அமைந்திருக்கிறது.
Comments
**********************
சரவெடியின் கட்டவிழ்த்து வெடித்து மகிழ்ந்தோம்!
சந்தோஷம் பொங்குமின்ப
தீபாவளி சித்திரையிலே
முத்திரை பதித்ததிங்கு!
*************************
பதினெட்டு சரவெடிகளில் நான் மிகவும் இரசித்த வெடி..👇🏽
*_8. பாக்மதிக் கரையில் இருக்கும் திருமணமான காளை! (4)_*
*குறுக்காக*
1. முற்றுப் பெறா வானம் அடங்கி ஒரு மொழி தோன்றியது (5)
முற்றுப் பெறா வானம்=வான,ஒரு மொழி=உருது, தோன்றியதுஉருவானது
4. வாளை வைக்க கரிகாலனுக்கு தலைநகரில் பாதி தேவைப்படும் (2)
கரிகாலனுக்கு தலைநகரில் பாதி= உறை(யூர்),வாளை வைக்க தேவைப்படும்=உறை
6. பிரிக்க முடியாத நூல் பிணைப்பும் மாட்டும் (4)
பிரிக்க முடியாத நூல் பிணைப்பும்=சிக்கும்= மாட்டும்
7. பெண் மரம் வெட்டி சாவு அவ்விடம் சூழ்ந்தது (4)
மரம் வெட்டி சாவு=(மர)ண(ம்),அவ்விடம் சூழ்ந்தது=அங்கு,பெண்=அணங்கு
9. புரட்டா வைகாசி தொடங்கி மார்கழியில் பாடப்படும் (5)
புரட்டா=திருப்பா,வைகாசி தொடங்கி=வை,திருப்பாவை
12. மனைவி முதல் மாதம் இடை சூழ்ந்த மார்கழியில் பெய்வது (4)
முதல் மாதம் இடை சூழ்ந்த=(சி)த்தி(ரை),மார்கழியில் பெய்வது= பனி,மனைவி=பத்தினி
14. பெண்பாதி கொண்ட ஆண்மகனே! கடவுளே! (4)
பெண்பாதி= (பெ)ண்,ஆண்மகனே!=ஆடவனே,கடவுளே=ஆண்டவனே
17. ஒட்டு ஒப்பானது (2)
ஒட்டு= இணை=ஒப்பானது
18. ஒரு செயலைத் தேர்ச்சியுடன் ஆனால் குழப்பமாகப் படம் திற (5)
குழப்பமாகப் படம் திற=படம் திற= திறம்பட=ஒரு செயலைத் தேர்ச்சியுடன்
*********************
*நெடுக்காக*
1. இதையடைந்தவர் மேலே செல்வதில்லை (3)
இதையடைந்தவர்=உச்சி=மேலே செல்வதில்லை
2. செய்வேனென்ற கூற்று குழப்பத்தில் வழக்கு தொடர்ந்தவர் முனை வெட்டி நறுக்கு (5)
வழக்கு தொடர்ந்தவர்=வாதி,முனை வெட்டி நறுக்கு= (ந)றுக்கு,செய்வேனென்ற கூற்று குழப்பத்தில்=வாதி+றுக்கு= வாக்குறுதி
3. கப்பல் புறப்படுமிடத்தில் முகமிழந்து பிரிவு (2)
கப்பல் புறப்படுமிடத்தில் முகமிழந்து= துறை(முகம்)=பிரிவு
4. சாப்பிடுவதற்கு அம்மா சென்றபின் உன் அண்ணனை . . . (3)
அம்மா சென்றபின் உன் அண்ணனை=உ(ன்)(அ)ண்ண(னை)=உண்ண=சாப்பிடுவதற்கு
5. பொருத்தமான யானைப் பல்லாலான குதிரையின் தலையை விழுங்கு (4)
யானைப் பல்லாலான=தந்த,குதிரையின் தலையை =கு விழுங்கு=தகுந்த= பொருத்தமான
7. பெற்றவர், குற்றமற்றவர், விற்றவர், தலைவாங்கியவர் (3)
குற்றமற்றவர்=அப்பாவி,விற்றவர் தலை = வி,வாங்கியவர்=அப்பாவி-வி=அப்பா=பெற்றவர்
8. பாக்மதிக் கரையில் இருக்கும் திருமணமான காளை! (4)
பாக்மதிக் கரையில் இருக்கும் = நேபாள நதிக்கரையில் உள்ள பசுபதி நாத் கோயில் = பசுபதி = திருமணமான காளை! (பசுவின் பதி காளை)
10. ராஜகுரு மானிடர்களிடம் கண்ட ஒரு மாவினம் (3)
ராஜகு ருமானி டர்களிடம்= ருமானி =ஒரு மாவினம்
11. சிவலோகப் பதவியை விரும்பாத பக்தர்கள் செல்ல விழையுமிடம் (5)
விஷ்ணு இருக்குமிடம் வைகுண்டம்
13. இலக்கியத்தின் பிரிவு பாதி பெண்ணைச் சுற்றிடும் வீட்டின் பகுதி (3)
இலக்கியத்தின் பிரிவு= திணை,பாதி பெண்ணை= ண்,வீட்டின் பகுதி=திண்ணை
15. வறுத்தெடுக்க மாட்டை விரட்டி ஆட்டவா சுழற்றவா? (3)
மாட்டை விரட்டி ஆட்டவா= ஆட்டவா-ஆ=ட்டவா,சுழற்றவா?= வாட்ட= வறுத்தெடுக்க
16. சுரத்தையிழந்த ஒரு வெடி வகையில் தோன்று (2)
ஒரு வெடி வகையில்=உதிரி,சுரத்தையிழந்த= ரி,தோன்று=உதிரி-ரி= உதி
**********************
நன்றி வாஞ்சியாரே!
கோடையாயிற்று அடுத்து வாடைக்காலமோ?
💐🙏🏼💐
கரிகாலனின் தலை நகரும் நல்ல அமைப்பு
உச்சி அடைந்தபின் மேலே செல்வதில்லை, கணித பேராசிரியர் என்று காட்டுகிறது. dy/dx = 0 ன்னு சொல்லாம விட்டாரே.
உதிரி வெடியா சர வெடியா என்றால், சர வெடிதான் நான் விரும்புவது. சர வெடியில் சில எழுத்துக்கள் கிடைத்துவிடும் என்பதால் மிகவும் கடினமான கட்டமைப்புகளும் சொல் விளையாடல்களும் செய்யலாம். சாதாரண வெடிகளே மிகவும் கடினமானதாகிவிடும் உதிரியாக வந்தால்.
சரவெடியில் கட்டங்களினறி ஒரு நாள் வெளியிடுகிறேன். அடுத்த நாள் கட்டத்தை வெளியிடலாம்.
A crossword is a crossword. Grid and grid fills are part of the puzzle.
In solving a puzzle of any difficulty, the checked letters - or letters that are common to two answers - play a vital art.
Clues such as those that we see in the usual straightforward puzzles in Tamil publications may be capable of being solved without any crossers but to solve tricky clues the crossers are a great help.
Cryptic clues do require their element - the grid - just as fish require water to be in.
I also know that interlocking Tamil words in a symmetric grid is a stupendous task and you (and some others like S. Parthasarathy and his wife) have done it and done it successfully.
Congrats. If, from time to time you have the urge to take a word and form a cryptic clue, so be it. All is part of fun.
Sincerely,
CV
I want to draw your attention to one important point that is a big contrast to English and Tamil which makes solving a grid-based puzzle too easy which in my opinion robs the solver of some fun.
In English when two words intersect it is a letter, say like, 'k' that is common. Whereas in Tamil the intersecting letter could be
"கி" which is equivalent to two English letters "k" and "i".
In the puzzle above if one had solved 1Ac and 6 Ac, the help one gets to solve 1 Down is "உ _சி". Now it is a simple tie between உச்சி and உரசி which rdoes not require deep analysis of clue to resolve.
Clues Across
1. Container/content clue with excellent inserticator
4. Deletion clue.
6. Two definitions.
7. Container/content
9. Charade
12. Container/content
14. Container/content
17. Two definitions
18. Anagram
Clues down
1. Cryptic
2. Anagram with deletion
3. Head letter deletion
4. Deletion
5. Container/content
7. Tail letter deletion
8. Two definitions (The exclamation mark is there in the clue deservedly)
10. Telescopic
11. Straightforward
13. Container/content
15. Anagram after deletion (appropriate deletion indicator)
16. Letter deletion
தென்றல் இதழ்களில் வந்த குறுக்கெழுத்து புதிர்களை மிகவும் ரசித்தவன் என்பதால் எனக்கு சரவெடி பிடிக்கும். உதிரிவெடி கடினமாக இருந்தாலும் மிகவும் சுவாரசியமாக உள்ளது.
உங்கள் வரவால் இவ்வலைப்பக்கம் களைகட்டுகிறது. ஐம்பது ஆண்டுகள் பல நூறு (அல்லது ஆயிரம்) முழுக் கட்டவலைப் புதிர்களை ஆங்கில நாளேடான ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இவற்றுக்கு அளித்த உங்கள் கவனம் என் முயற்சியின்பால் திரும்பியதில் பெருமைப் படுகிறேன்.
In Tamil it might make sense to abandon the tradition square grid of English and adapt something like filled tiles of a scrabble board that will reduce the number of checked letters. It will also reduce the load of thinking up Tamil words with multiple interlocks with others. The original word-cross of 1920s had something like this, not the currently popular grid with light and dark squares.
Just my thoughts.
Really interesting as well as informative!
1. சர வெடியும் உதிரி வெடியும்: உதிரி வெடியில் விடை கண்டுபிடிப்பது சர வெடியை விடச் சற்று சவால் அதிகம்தான்; ஆனால், பழகி விட்டால் சுவையாகவும், நேரம் அதிகம் செலவிடாமலும் புதிரை அவிழ்த்த மகிழ்ச்சி பெரிது. பலரும் "அறிவார்ந்த" கைபேசி வைத்திருப்பதால், உதிரி வெடி இந்தச் சூழ்நிலையில் அதிக இரசிகர்களை ஈர்க்கும்.
2. தமிழ் எழுத்துரு (உரோமன் எழுத்துருவுடன் ஒப்பிட்டு நோக்கையில்) புதிர் அமைப்பதில் சில நெருக்கடிகளும், புதிர் விடுவிப்பவருக்கு சில சௌகரியங்களும் அளிக்கிறது.
3. தமிழ் "சங்கேதக் (cryptic)" குறுக்கெழுத்து இன்னும் சிலரும் அமைத்து பல குழுக்களுடன் பகர்ந்து என் போன்ற இரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த நேரத்தில், திரு ஹரி பாலகிருஷ்ணன் ஆற்றியுள்ளபெரும் தொண்டு பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கு சென்று பார்க்கவும்: http://www.puthirmayam.com/ இந்த வலைத்தளத்தைப் பயன் படுத்திப் பலரும் குறுக்கெழுத்துப் புதிர்கள் அமைத்திருக்கிறோம். கட்டம் அமைப்பதும், புதிர் அமைப்பதும், கட்டங்களில் விடைகளை நிரப்புவதும் கணினிப் பயனர்களுக்கு (புதிர் அமைக்கவும், விடைகளை நிரப்பவும்)வெகு எளிதாகிறது.
4. http://www.puthirmayam.com/ பயன் படுத்தி முனைவர் ஆர். வைத்தியனாதன் வாரம் ஒரு சர வெடி அமைத்து அளித்து வருகிறார். இவர் "asymmetrical" கட்டம் கொண்டு, புதிர் மயம் மூலம் புதிர்கள் அமைத்தளிக்கிறார். அவர் அமைத்த அண்மைப் புதிர் இங்கு காணலாம்: https://ramavnathan.blogspot.com/2019/04/maaya-vinnavar.html
5. ஆங்கிலத்தில் இருப்பதுபோல் தமிழில் ஒரு தரப்படுத்தப்பட்ட (standardized), அதிகார பூர்வமான அகரமுதலியோ, நிகண்டோ வலையுலகில் இருப்பதாகத் தெரியவில்லை. "Standard Oxford Dictionary/Websters Dictionary" போன்ற ஒன்று இல்லை; புதிர் அமைப்பதிலும், புதிருக்கு விடை தேடுவதிலும் இது ஒரு முட்டுக்கட்டையாக் உணர்கிறேன்.
முடிவாக: சர வெடியோ, உதிரி வெடிகளோ தொடர்ந்து சலிக்காமல் அளித்து என் போன்ற இரசிகர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யுமாறு முனைவர் வாஞ்சி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
Dr.Vanchi, the next time you publish a crossword, I can help with it.
On the point of a crossword clue being easier to solve due to already solved letters from other clues, I feel that should be taken into account when setting the clue. For me, identifying the word is just one part of solving. Identifying/appreciating how the clue matches the word is the other part. While the word could be identified easily because of existing letters, the clue could be made more cryptic resulting in the second part being harder.