Skip to main content

விடை 3674


புறநானூற்றில் ஒரு பாடல் மோசிகீரனார்,  தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடியது.  முரசு இல்லாதபோது அதை வைக்கும் கட்டிலில் அறியாமல் புலவர் களைப்பில் தூங்கிவிட அவருக்கு மன்னர் தண்டனை அளிக்காமல் அருகில் நின்று கவரி வீசியதைப் பற்றியது.

ஞானக்கூத்தனின்  கவிதை இந்நிகழ்ச்சியை  அங்கதச் சுவையுடன் கூறுகிறது:

தோழர் மோசிகீரனார்
மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்

***************
இன்றைய  வெடி: 
உடலின் ஒரு பகுதி தண்ணீர்த் துளி கொண்டிருப்பதைப் பற்றிய  கேலி? (5)
 
இதற்கான விடை: அங்கதம்

இங்கே செல்லவும்.

Comments

உஷா said…
விடை பார்க்க முடியவில்லையே
Muthu said…
க்ரிப்டான் விடை அனுப்பினோர் பட்டியல் உதிரி விடை அனுப்பினோராக வந்திருக்கிறது!
Vanchinathan said…
இப்போது சரிசெய்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.
Muthu said…
அங்கதனில் கண் விழித்தேன் - அடடா ஓ அடடா! புதிரமைக்கும் புலமைதான் இதுவென்றே வியந்தேன்! முயன்றவர் 19; சரியாக விடை அளித்தோர் 6! உடலின் உறுப்பைத் தேடி உள் உறுப்புகள் பலவற்றையும் வெளிக் கொணர்ந்தோர் பலர்! விடை "கேலி"யாகி விட்டதே!
Raghavan MK said…
அங்கதத்தை நாம் தனிப்பாடல் அளவிலேயே நிறுத்திக் கொண்டோம். ஆனால், மேலைநாட்டு இலக்கிய வல்லுநர்கள் அதை ஒர் இலக்கியத் துறையாக வளர்த்திருக்கின்றனர். அங்கதத்தை அவர்கள் Satire என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்
Muthu said…
மேடைப் பேச்சிலும், திரைப்பட/நாடக வசனங்களிலும் அறிஞர் அண்ணா, கலைஞர், சோ முடதலியவர்கள் அங்கதம் செய்திருக்கிறார்கள். சோவும் அவர் பின்னோடிகள் பலரும் முழு நாடகமே அங்கதமாக (துக்ளக், க்வோவாடிஸ், சம்பவாமி யுகே யுகே) வடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். புதுமைப் பித்தன் கதைகளிலும் அங்கதம் காண முடியும். தற்காலத்தில் திரு ஜயமோஹன் அங்கதக் கட்டுரைகள் அடிக்கடி எழுதி வருகிறார்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.