Skip to main content

விடை 3674


புறநானூற்றில் ஒரு பாடல் மோசிகீரனார்,  தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடியது.  முரசு இல்லாதபோது அதை வைக்கும் கட்டிலில் அறியாமல் புலவர் களைப்பில் தூங்கிவிட அவருக்கு மன்னர் தண்டனை அளிக்காமல் அருகில் நின்று கவரி வீசியதைப் பற்றியது.

ஞானக்கூத்தனின்  கவிதை இந்நிகழ்ச்சியை  அங்கதச் சுவையுடன் கூறுகிறது:

தோழர் மோசிகீரனார்
மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்

***************
இன்றைய  வெடி: 
உடலின் ஒரு பகுதி தண்ணீர்த் துளி கொண்டிருப்பதைப் பற்றிய  கேலி? (5)
 
இதற்கான விடை: அங்கதம்

இங்கே செல்லவும்.

Comments

உஷா said…
விடை பார்க்க முடியவில்லையே
Muthu said…
க்ரிப்டான் விடை அனுப்பினோர் பட்டியல் உதிரி விடை அனுப்பினோராக வந்திருக்கிறது!
Vanchinathan said…
இப்போது சரிசெய்துவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.
Muthu said…
அங்கதனில் கண் விழித்தேன் - அடடா ஓ அடடா! புதிரமைக்கும் புலமைதான் இதுவென்றே வியந்தேன்! முயன்றவர் 19; சரியாக விடை அளித்தோர் 6! உடலின் உறுப்பைத் தேடி உள் உறுப்புகள் பலவற்றையும் வெளிக் கொணர்ந்தோர் பலர்! விடை "கேலி"யாகி விட்டதே!
Raghavan MK said…
அங்கதத்தை நாம் தனிப்பாடல் அளவிலேயே நிறுத்திக் கொண்டோம். ஆனால், மேலைநாட்டு இலக்கிய வல்லுநர்கள் அதை ஒர் இலக்கியத் துறையாக வளர்த்திருக்கின்றனர். அங்கதத்தை அவர்கள் Satire என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்
Muthu said…
மேடைப் பேச்சிலும், திரைப்பட/நாடக வசனங்களிலும் அறிஞர் அண்ணா, கலைஞர், சோ முடதலியவர்கள் அங்கதம் செய்திருக்கிறார்கள். சோவும் அவர் பின்னோடிகள் பலரும் முழு நாடகமே அங்கதமாக (துக்ளக், க்வோவாடிஸ், சம்பவாமி யுகே யுகே) வடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். புதுமைப் பித்தன் கதைகளிலும் அங்கதம் காண முடியும். தற்காலத்தில் திரு ஜயமோஹன் அங்கதக் கட்டுரைகள் அடிக்கடி எழுதி வருகிறார்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்