இன்று காலை வெளியான புதிர்:
பொறுப்பின்றி வயலின் வாசித்தவன் அரை ஆடையுடன் குளிக்க வந்த இடம்? (3)
இதற்கான விடை: நீரோடை; ரோமாபுரியின் அரசன் நீரோ, ரோம் நாட்கணக்காக எரிந்து கொண்டிருந்த போது கவலைப்படாமல் வயலின் வாசித்ததாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். நீரோவின் காலத்தில் வயலின் (பிடில்) இல்லையென்பதை ஒரு காரணமாகக் கூறுகிறார்கள். ரோம் எரிந்தது ஏசு கிறிஸ்துவின் காலத்திற்குப் பின்னர் ஒரு நூற்றாண்டுக்குள் நடந்தது.
நம்முடைய புதிரில் இன்று வந்திருக்கும் நீரோவை அப்படிப் பொறுப்பில்லாதவர் என்று கூற முடியாது. ஏன்? பின்வரும் வெண்பாவில் தெரியும்:
ஊரெல்லாம் பற்றியெரிய ஓடைக்கு வந்தங்கு
நீரெடுத்தான் நீரோ நெருப்பை அணைத்திடவே
பாரெங்கும் ஏனோ பழி.
இப்புதிருக்கு அனுப்பபட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

Comments