Skip to main content

விடை 3629

இன்றைய வெடி
பார்த்தாலே தெரியும் உள்நாட்டுச் சேவைக்கான ராணுவமில்லை என்று! (5)
 இது போன்ற புதிரமைக்கும்போது நிறைய‌ யோசித்துக் கண்டுபிடிக்கும்படியும்  விடை சட்டென்று புலப்படாதவாறும் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய புதிருக்கு விடை வெளிப்படையாக அமைந்துவிட்டதற்கு மன்னிக்கவும்.

இன்று அனுப்பப்ப‌ட்ட விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

Comments

Raghavan MK said…


*வெளிப்படையாக* இல்லாமல் கொஞ்சம் குழப்புகின்ற புதிர்தான்!
படித்தாலே தெரிய நேரமாகும்போது *_பார்த்தாலே தெரியும்_* என்கிறார் புதிராசிரியர்.!
(அவர் கண்ணுக்கு மட்டுமா?)
*********
*_உள்நாட்டுச் சேவை_* என்றதும்
கொங்கு நாட்டு இடியாப்பம்தான் ,அரிசி மாவை நூல்போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு , ஞாபகம் வந்தது!
**********
*_ராணுவமில்லை_* என்று கவலைப்பட தேவையில்லை!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.!
🤺🤺🤺🤺🤺🤺
*******************
_பார்த்தாலே தெரியும் உள்நாட்டுச் சேவைக்கான ராணுவமில்லை என்று! (5)_

_ராணுவம்_ = *படை*

_உள்நாட்டுச் சேவை இல்லை_
= _உள்ளே இல்லை_
= *வெளி* ( *யே* )

_பார்த்தாலே தெரியும்_
= *வெளி+படை*
= *வெளிப்படை*
*************************
Muthu said…
சரியாகச் சொன்னீர்கள் ராகவன் சார்! ராணுவம் என்றதும் மிலிட்டரி, பட்டாளம் எல்லாம் நினைவுக்கு வர, படை வர அஞ்சிவிட்டது. 10 நிமிஷம் மண்டையை உடைத்த பின்னரே வெளிப்படை வந்தது! ஒவ்வொரு நாள் புதிரும் வெவ்வேறு வழியில் தடம் புரளச் செய்து முடிவில் சிந்தனைக்கு விருந்தாகி மகிழ்விக்கிறது!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்