Skip to main content

விடை 3641

இன்று காலை வெளியான வெடி:
பிற கண்ணுக்கு அழகூட்டும் வடிவம் புருவ முனையுடன், ஐயோ? (4,3)
இதன் விடை: வேற்றுமை உருபு
புதிரின் இறுதியில் "ஐயோ" என்பது "ஐ" என்ற (இரண்டாம்) வேற்றுமை உருபோ என்று கேள்வியாக "ஐ‍‍‍-ஓ?". (மாநகரம் என்பது விடையாக இருக்கும்போது "கொல்கத்தாவோ?" என்று கேட்கலாம்.)

பிற = வேற்று; கண்ணுக்கு அழகூட்டும் = மை; வடிவம் = உரு; பு = புருவ முனை.
இன்று அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்.

Comments

Raghavan MK said…


********************
*ஐயோ!*
இதென்ன கொடுமைடா,
*அழகூட்டும் வடிவம், புருவ முனை* , என்று புத்தாண்டு புதிர் ஒரே *ரொமாண்டிக்கா* போட்டு தள்ளியிருக்காரே புதிராசிரியர் என முதலில் நினைத்தேன்.
பின் அத்தனையும் அழகான சொல்லாடல் என்று விடை கண்டதும் புரிந்தது! அருமையான புதிர்! 💐👏🏼
*************
*வேற்றுமை -*
_பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும்._
**************
_பிற கண்ணுக்கு அழகூட்டும் வடிவம் புருவ முனையுடன், ஐயோ? (4,3)_ 
_பிற_ = *வேற்று*
_கண்ணுக்கு அழகூட்டும்_
= *மை*
_வடிவம்_ = *உரு*
_புருவ முனையுடன்_ ,
= *பு*
= *வேற்று+மை+உரு+பு*
= *வேற்றுமை உருபு*
_ஐயோ?_ 😧
= *ஐ* (யோ)
= *வேற்றுமை உருபு* (2ம் வேற்றுமை உருபு )
************
வேற்றுமை உருபு

பெயர்ப் பொருளை வேற்றுமைப்படுத்தும் அல்லது பெயரில் பொருள் திரிபினை உணர்த்தும் வடிவமே _"வேற்றுமை உருபு"_ என வழங்கப்படும்.
உஷா said…

இன்றைய புதிரை மிகவும் ரசித்தேன். விடை க்ளிக் ஆனதும் பரவசம் அடைந்தேன்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.