Skip to main content

விடை 3635

பாரதப் போரில் துரோணரைக்  கொல்ல கண்ணன் செய்த திட்டப்படி யுதிஷ்டிரர்  அசுவத்தாமன் பற்றி அரைப்பொய் கூறுகிறார்.
அதுதான் அவர் சொன்ன  அரையே பொய் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதை நான் ஏற்க மாட்டேன். அதைத் தவிர ஒரு கால் பொய் சொல்லியிருக்கிறார்.  சில நாட்கள் முன்பு நகுலன், நச்சு கலந்த ஏரித் தண்ணீரைக் குடித்த  பூங்கோதை வழிப் புதிரை வெளியிட்ட இரவு யுதிஷ்டிரர் என் கனவில் வந்து எனக்கு நன்றி தெரிவித்தார்.   அப்போது தனக்கு இன்னொரு பேர் இருக்கிறது, அது "தருமுன்" என்று சொன்னார். அவர் இப்படிப் பொய் சொல்வார் என்று நான் எண்ணியிராததால் இன்று காலை ஒரு புதிர் அமைக்கும்போது  அதை நம்பி மோசம் போய்விட்டேன். பலரும் என்னிடம் அப்பிழையைச் சுட்டிக் காட்டிய பின்தான் அவர் செய்த‌ விஷமம் புரிந்தது. அதற்காகத்  தரையில்  உருண்டு புரள முடியுமா? அது நன்றாக இருக்காது என்று  புல்வெளியில் போய் உருண்டு புரண்டு  வேறு புதிர் செய்து வந்தேன். அப்புல்வெளியில் கொட்டியிருந்த கல்வெட்டியதைப் பொருட்படுத்தாமல் அரை மணி நேரத்தில் மாற்று வெடியைத் தயாரித்து வெளியிட்டேன்.

நம்பி மோசம் போன புதிர்:
வானொலியில் தன்னை மற‌ந்த யுதிஷ்டிரன் பக்தர்களின் சுமை (4)
இப்ப்புதிருக்கு உளறலாக நான் எண்ணிய விடை:  இருமுடி= இடி + ருமு

மாற்றுப் புதிர்:
கட்டுக்குள் அடங்கிய மாடு மேயுமிடத்தில் புளியெடுத்த வரலாற்றை உரைக்கும் (5)
இதற்கான விடை: கல்வெட்டு =  கட்டு + புல்வெளி ‍- புளி

விடையளித்தவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Comments

Muthu said…
புல்வெளியில் புரண்டாலும் மீசையில் மண் ஒட்டவில்லை!
Vanchinathan said…

அதற்காகத்தானே மண்தரையை விட்டு புல்வெளியில் விழுந்தேன்!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்