Skip to main content

விடை 3649

இன்று காலை வெளியான வெடி:

நாடகம் நடக்குமிடத்தில் வரலாம் அருளின்றி வேட்டியில்லை (3)

இதற்கான விடை:  மேலாடை = மேடை + வரலாம் - வரம் (அருள்)

இன்றைய புதிரைப் பார்த்து, "நாத்திகர்களுக்கு நன்றாகச் சவுக்கடி கொடுத்துவிட்டீர்கள், ஆண்டவனுடைய அனுக்ரகம் இல்லையென்றல் சாப்பாடு மட்டுமில்லை கட்டிக் கொள்ள  வேட்டி கூட கிடைக்காது என்ற தத்துவத்தை நன்றாக விளக்கி விட்டீர்கள்" என்று பாராட்டி நன்றி தெரிவித்திருக்கிறார் நண்பர்  ஒருவர் (அவருக்கும் இங்கே கருத்துரை எழுதுவதற்கு அலர்ஜி, எப்போதும் எனக்குத் தனி அஞ்சல்தான் அனுப்புவார்).
கூடவே ஒரு குறளையும் எழுதி அனுப்பினார்:

அருளில்லார்க் கில்லை அரைமூடும் ஆடை
இருள்நீக்கச்  சேர்வீர் இறை.


இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.



Comments

Ambika said…

நாடகம் என்றால் கூத்து.

நாடகம் நடக்குமிடத்தில் என்றால் அரங்கத்தில், சபையில், கூடத்தில், அவையில், மண்டபத்தில்.

நடக்குமிடத்தில் என்றால் பாதையில், சாலையில், காலில், பாதத்தில், வழியில்.

நாடகம் நடக்குமிடத்தில் வரலாம் என்றால் காட்சி, கூட்டம், கூச்சல், நடிகர், ஒளிவீச்சு, ஒளிக்கதிர், முன்னோட்டம், வெள்ளோட்டம்.

வேட்டியில்லை என்றால் துண்டு, சட்டை.

இப்படி ஒவ்வொரு வார்த்தையிலிருந்தும் விடையைத்தேடி கடைசியில் "வரலாம்" என்பதில் அருள் பெற்று மேடையேற்றுவது பெரும் பாடாகிவிட்டது!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்