Skip to main content

விடை 3637

விடை 3637
இன்றைய வெடி:
சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும் மாதவிக்கு ரிஷபம் (4)
இதன் விடை: துத்தம். (புதிரின் முதலிரு சொற்களில் இவ்விடை ஒளிந்துள்ளது).

மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்திற்கு மருதகாசியார் "மணப்பாறை மாடுகட்டி"  என்ற  பாடலில்   சம்பாதிச்ச காசை அம்மா கையில் கொடுத்தால் ஆறு ரூபாயை நூறாக்கித் தருவார்கள் என்று கூறியிருப்பார்.  அக்கா மாதவி,  த‌ம்பியிடம்  ச‌ம்பளத்தைக்  கொடுத்தால் ஒரு மணப்பாறைக் காளையை (ரிஷபம்) தருவான் என்று  நம்பிக் கொடுத்தாளா எனக்குத் தெரியாது. நான் சொல்வது  சிலப்பதிகாரத்து மாதவி.  அந்த காலத்தில் ஏழிசையை
இப்போதுள்ளவாறு  ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், என்ற சொல்லாமல் வேறு பெயர் வைத்திருந்தனர்.  அந்த ஸ்வர வரிசையில் இரண்டாவதாக ரிஷபத்துக்கு நிகராக வருவது "துத்தம்".  இதற்குமேலே இதைப் பற்றி விஷயம் தெரியாத நான் பேசினால் சரியாக இருக்காது. "சிலப்பதிகாரத்தில் இசை" என்று ஆழ்ந்து ஆராய்ந்து நூலெழுதி வெளியிட்டுள்ள  இசைய‌றிஞர் குடும்பத்தினர் இந்த உதிரிவெடிப் பக்கங்களுக்கு வாடிக்கையாக வருகின்றனர். அவர்களை,   கருத்துரைப் பகுதியில்  விவரங்களை அளிக்க அழைக்கிறேன்.

இப்புதிருக்கு எல்லோரும் அனுப்பிய விடைகளைக் காண இந்தப் பக்கத்திற்குச் செல்லவும்.                  


Comments

Raghavan MK said…


*ஏழு சுரங்கள்*
இந்த ஏழு சுரங்களின் பெயர்கள் பண்டைக்காலத்தில் _குரல், *துத்தம்* , கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்_ என அழைக்கப்பட்டன.

இன்று இப்பெயர்கள் சட்ஜமம், *ரிஷபம்* , காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற வடமொழிப் பெயர்களாக வழங்குகின்றன. தூய தமிழாக இருந்த பண்களின் பெயர்கள் பல இன்று வடமொழிப் பெயர்களாக மாறியுள்ளன.🤔
*************************
_சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும்  மாதவிக்கு ரிஷபம் (4)_ 

_சம்பாதித்துத்  தம்பியிடம் கொடுத்திருக்கும்_
= _[சம்பாதித்] *துத்தம்* [பியிடம்]_
= *துத்தம்*

_மாதவிக்கு ரிஷபம்_
= *துத்தம்*
Muthu said…
என் தங்கை Meenakshi Subramanian சொல்வது: 'குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'[13]



தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.

“வேண்டிய வண்டும்மாண்டகு கிளியு

குதிரையும் யானையும்குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை [14]
சிலப்பதிகாரத்தில் 7சுரங்கள்
Muthu said…
புதிய சொல்லும், செய்தியும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி!
உஷா said…
நானும் அவ்வண்ணமே

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்