இன்று காலையில் வெளிவந்த வெடி:
நீரில் நிலைக்காதடா மரத்தை வெட்டிப் பள்ளத்தில் போடும் தருமி (3)
இதற்கான விடை:
குமிழி = குழி + (தரு) மி
தரு = மரம் (கற்பகத் தரு என்பதிலிருந்து நான் தெரிந்து கொண்டது)
இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.
நீரின் குமிழி நிமிடத்தில் மாய்ந்திடுமாம்
பாரில் நிலைக்காது பல்லாண்டு வாழ்க்கையென
சித்தாந்தம் சொல்வோரே செப்பிடுவீர் ஓர்நொடியில்
எத்தனை யோ காதங்கள் எட்டிடுமே மின்னலையும்
சத்தான இவ்வெண்பா தந்து.
மின்னலை = மின் + அலை ((electromaganetic waves)

Comments
நீர்க்குமிழி நீரில் நிலைக்காதடா! ;-)
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலட
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
சிரிப்பவன் கவலையை மறைகின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா