Skip to main content

விடை 3652

இன்று காலையில் வெளிவந்த வெடி:
நீரில் நிலைக்காதடா மரத்தை வெட்டிப் பள்ளத்தில் போடும்  தருமி (3)

இதற்கான விடை:
குமிழி = குழி + (தரு) மி
தரு = மரம் (கற்பகத் தரு என்பதிலிருந்து நான் தெரிந்து கொண்டது)

இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.


நீரின் குமிழி நிமிடத்தில்  மாய்ந்திடுமாம்
பாரில் நிலைக்காது பல்லாண்டு வாழ்க்கையென
சித்தாந்தம் சொல்வோரே  செப்பிடுவீர் ஓர்நொடியில்
எத்தனை யோ காதங்கள்  எட்டிடுமே மின்னலையும்
சத்தான இவ்வெண்பா தந்து.


 மின்னலை = மின் + அலை ((electromaganetic waves)

Comments

Ramki Krishnan said…
Lovely clue. Liked the two references to my favourite actor Nagesh in the clue and answer (his movie நீர்க்குமிழி and his famous role தருமி) :)
Vanchinathan said…
நீர்க்குமிழி படம் பற்றிக் கேள்விப்படிருக்கிறேன். பார்த்ததில்லை. திரைப்படப் பாடல்கள் தெரிந்த அளவுக்குப் படங்கள் எனக்குத் தெரியாது. நன்றி ராம்கி.
Ambika said…
நீர்க்குமிழி படப்பாடல் ..."ஆடி அடங்கும் வாழ்க்கையடா",
நீர்க்குமிழி நீரில் நிலைக்காதடா! ;-)
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா


முதலில் நமக்கெல்லாம் தொட்டிலட
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்


ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா


சிரிப்பவன் கவலையை மறைகின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்


ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா



வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை


ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா
K.Kanagasabapathy said…
https://www.youtube.com/watch?v=0LN1-C4ANLY

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்