Skip to main content

விடை 3656

இன்று காலை வெளியான வெடி:
தலையோடு வந்தால் விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும் (4)

இதற்கான விடை: எழுத்து  (தலையெழுத்து = விதி;  கையெழுத்து = ஒப்புதல்)

இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் பட்டியல்.

 

Comments

இன்றைய புதிர் கொஞ்சம் மாறுபட்டது. இது இரட்டை விளக்கம் ( double definition ) வகையை சார்ந்தது. ஆனால், விளக்கம் நேரடியாக இல்லை. உதாரணமாக எதிர்காலத்தில் அந்தப் பையன்தான் கெட்ட பையன் இல்லை (7) = இனியவன்தான். இனிமேல் அவன்தான் = எதிர்காலத்தில் அந்தப் பையன் தான். கெட்ட பையன் இல்லை = இனிமையான பையன் தான். இது இரட்டை விளக்கம் வகை புதிர். இதில் கட்டுமான (construction) இல்லை.

ஆனால் இன்றைய புதிரில் விளக்கம் நேராக இல்லை, தலை+எழுத்து = விதி. கை + எழுத்து = ஒப்புக்கொள்ளுதல். இது indirect double definition வகை புதிர் ஆகிறது.

கொஞ்சம் இல்லை நிறையவே மாறுபட்ட அமைப்பு.
Vanchinathan said…
நன்றி ரவி சுந்தரம், இனியவனுக்கு நல்ல குறிப்பைக் கொடுத்ததற்கு. வழக்கமான பாதயிலிருந்து விலகிச் சென்றது வேண்டுமென்றே செய்ததுதான். ஆனால் உங்கள் கருத்து இது ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்பதைச் சந்தேகமாகச் சொல்வதாக இருக்கிறது.

ஒரு முறை இதே பாணியை முன்பு கையாண்டிருக்கிறேன்.
Raghavan MK said…
எழுத்து என்ற சொல் மனதில் பட்டது , ஆனால் *சரியாக இனைக்க முடியவில்லை.!*
கபாலமும் அப்படித்தான்!
So l preferred the later one!
*************
_தலையோடு வந்தால் விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும் (4)_

_தலையோடு வந்தால்_
= _மண்டை ஓடு_
= *கபாலம்*

_விதி என்பதைக் கையோடு ஒப்புக்கொள்ளும்_

_கையிலிருக்கும் ஓடு_
= _திருவோடு_
= *கபாலம்*
××××××××××××××××××××
வீடு வீடாக பிச்சை கேட்டு வரும் சாமியார்கள், கோயில்களுக்கு முன்பு அமர்ந்திருக்கும் சாமியார்களை பார்த்திருப்போம். அவர்களின் *கைகளில்* கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டி கொடுத்தது போன்று ஒரு பாத்திரம் இருக்கும். அரிசியோ, பணமோ அதில்தான் வாங்கிக் கொள்வார்கள். அதை *திருவோடு* , அட்சய பாத்திரம், *கபாலம்* என்ற பெயர்களில் அழைப்பார்கள்.
Vanchinathan said…
தலையோடு--> மண்டையோடு --> கபாலம் ---> திருவோடு.

ஒரு ரசிக்கும்படியான வேற்றுப்ப்பார்வையை, ராகவன் முன் வைக்கிறார். இங்கே ஒரு சொல் (எழுத்து),தலை, கை இரண்டுடன் சேர்த்துக் கூறப்படும்போது ஏற்படும் சம்பந்தமில்லா அர்த்தங்களைக் கொண்டு வருகிறது. இதில் புத்ருக்கு சுவாரசியமாகக் கிடைத்த அம்சம் என்னவெண்ரால் அந்த இரண்டு ஒட்டுச் சொற்களும் (தலை, கை) உடலின் பாகங்களாக அமைந்ததுதான்.
உஷா said…
இன்றைய புதிர் கிட்டத்தட்ட விடுகதை போலிருக்கிறது
புதிர் சரியாகவே அமைக்கப்பட்டுள்ளது, அதில் சந்தேகம் எதுவுமில்லை.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்