இன்றைய வெடி:
ஒரு நட்சத்திரம் முதல் முதல் மாதம் கடைசியாக வந்தது (3)
முதல் = ஆதி
முதல் மாதம் = சித்திரை
விடை = ஆதிரை, ஒரு நட்சத்திரம். (ஒரையன் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் வேடன் நட்சத்திரக் கூட்டத்தில் இடம் பெறும் betelgeuse நட்சத்திரம் இது என்கிறார்கள்.)
மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை, அன்னதானம் செய்ய விசேஷமான பாத்திரத்தைப் பெற்றாள். ஆனால் அதில் முதன்முதலாக ஓர் உத்தமியிடம் பிச்சை பெற்றால்தான் அது அமுதசுரபியாக தீராமல் உணவை வழங்கும். அப்படிப்பட்டத் தகுதியையுடயவள் என்று ஆதிரையிடம்தான் பிச்சையைப் பெற்றாள்.
அப்படிப்பட்ட முதல் பிச்சையிடும் தகுதி வாய்ந்த ஆதிரை பற்றிய புதிரில் இரண்டு முறை முதல் என்று சொல்வது சரிதானே?
இரட்டை முதலீட்டால் நல்ல லாபம் வரும். நேற்று ஒற்றை முதலீட்டில் தக்கவைத்துக் கொள்ள மட்டும்தான் முடிந்த்து. இன்று அமுதசுரபியாய் வரட்டும்.
விடையளித்தோர் விவரங்களை இந்தப் பக்கம் சென்று காணலாம்.

Comments
முதல் முதல்= மூல
மாதம் கடைசியாக (ம்)
ஆகவே. மூலமும் சரிதானே!
இரண்டுமே பொருத்தமாகத் தோன்றியதால் இரண்டையும் சேர்த்தே குறிப்பிட்டேன்
அதன் படி முதல் மாதம், திங்கள் என்று எடுத்து "தி" கடைசி என்றாகி ரேவதி என்று எழுதினேன். பின்னர் இரண்டு முதல்கள் வந்த பின் ஆரதி என்று எழுதினேன்.
திரு பற்றி கொஞ்சம் திரு திரு என்று விழித்த பின் "ஆதிரை" என்பதும் சரி என்று தோன்றியது.
சமீபத்தில் மிக்க குழப்பத்தை உண்டு பண்ணிய புதிர்.
ஆசிரியர் அந்த விதத்தில் வெற்றி அடைந்தார். வாழ்த்துக்கள்.