Skip to main content

விடை 3633

இன்றைய வெடி:
ஒரு நட்சத்திரம் முதல் முதல் மாதம் கடைசியாக வந்தது (3)
 முதல் = ஆதி
முதல் மாதம் = சித்திரை
விடை = ஆதிரை, ஒரு நட்சத்திரம்.  (ஒரையன் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் வேடன் நட்சத்திரக் கூட்டத்தில் இடம் பெறும்  betelgeuse நட்சத்திரம் இது என்கிறார்கள்.)


மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை,  அன்னதானம் செய்ய விசேஷமான பாத்திரத்தைப் பெற்றாள். ஆனால் அதில் முதன்முதலாக ஓர் உத்தமியிடம் பிச்சை பெற்றால்தான் அது அமுதசுரபியாக தீராமல் உணவை வழங்கும். அப்படிப்பட்டத் தகுதியையுடயவள் என்று ஆதிரையிடம்தான் பிச்சையைப்  பெற்றாள்.

அப்படிப்பட்ட முதல் பிச்சையிடும் தகுதி வாய்ந்த ஆதிரை பற்றிய புதிரில் இரண்டு முறை முதல் என்று சொல்வது சரிதானே?

இரட்டை முதலீட்டால் நல்ல லாபம் வரும். நேற்று ஒற்றை முதலீட்டில் தக்கவைத்துக் கொள்ள‌ மட்டும்தான் முடிந்த்து. இன்று அமுதசுரபியாய் வரட்டும்.

விடையளித்தோர் விவரங்களை இந்தப் பக்கம் சென்று காணலாம்.

Comments

Muthu said…
மொத்த விடைகள் 44 ஆதிரை 17 (18) மூலம் 21 (22) (மூலம்/ஆதிரை 1)மற்றவை 5; என் புரிதல்: முதல் முதல் = ஆதி = மூல? மூலவர்; மூலப்பகுதி; மூலதனம்; மரம்; மூலநாள்; மூலபாடம்; மூலநோய்; "மாதம் கடைசியாக" ==> ம்
முதலை வாயில் சிக்கிய. யானை 'ஆதிமூலமே' என்று தானே அழைத்தது.
முதல் முதல்= மூல
மாதம் கடைசியாக (ம்)
ஆகவே. மூலமும் சரிதானே!
திருவாதிரை என்பது தானே முழுப்பெயர்!
உஷா said…

இரண்டுமே பொருத்தமாகத் தோன்றியதால் இரண்டையும் சேர்த்தே குறிப்பிட்டேன்
Muthu said…
புதிராசிரியர் கூற்று? ஒரு நட்சத்திரம் (=3) = முதல் (2) + "முதல் மாதம்" கடைசியாக (1) {வந்தது}
ஆரம்பத்தில் நான் விடை அளித்தபோது ஒரு "முதல்" இருந்தது என்று எண்ணுகிறேன். நான் தனியாக எழுதி வைத்ததையும் சரி பார்த்தேன்.
அதன் படி முதல் மாதம், திங்கள் என்று எடுத்து "தி" கடைசி என்றாகி ரேவதி என்று எழுதினேன். பின்னர் இரண்டு முதல்கள் வந்த பின் ஆரதி என்று எழுதினேன்.
திரு பற்றி கொஞ்சம் திரு திரு என்று விழித்த பின் "ஆதிரை" என்பதும் சரி என்று தோன்றியது.
சமீபத்தில் மிக்க குழப்பத்தை உண்டு பண்ணிய புதிர்.
ஆசிரியர் அந்த விதத்தில் வெற்றி அடைந்தார். வாழ்த்துக்கள்.
இரண்டாம் முறை ஆதிரை என்று எழுதினேன் "ஆரதி" அல்ல

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.