Skip to main content

விடை 3644

இன்று காலை வெளிவந்த வெடி:
மூட்டை சுமக்குமிடத்தில் மேகம் மலையிறங்கி ஒரு பருப்பு சுமக்கும் (4) 

இதற்கான விடை:   முதுகில் 
துவரை - வரை (மலை)  = து. இதைச் சுமந்த "முகில்"  முதுகில் என்ற விடை
கிடைக்கும்.

இன்றை புதிருக்கு வந்த விடைகளை இப்பக்கத்தில் சென்று காணுங்கள்.

வானத்தில் சும்மாவே திரிந்துகொண்டிருக்கும் மேகங்கள் இப்படிக் கொஞ்சம் மூட்டைகளைச் சுமந்து மலையிலிருந்து இறங்கி வீட்டில் சேர்த்தால் உபயோகமாயிருக்கும், மனிதர்களுக்கும் சுமைகூலி மிச்சமாகும்.
அறிஞர்களை cloud computing  என்று ஆராய்ச்சி செய்வதை விடுத்து மேக விடுதூது, மேகச் சரக்குசேவை  என்று ஆய்வு நடத்தும்படி  விண்ணப்பிக்கிறேன்.
  
லைமேல் முகிலடுக்கு மாந்தரின் பாரம்
தலைமேற்கொண் டோடின்  தரணியில் வாழ்வோர்
விலையில்லாச் சேவை விரைவாகப் பெற்று
சிலைபோல் வணங்குவர் சேர்ந்து.


Comments

Raghavan MK said…
முதற்கண் புதிராசியருக்கு பாராட்டுக்கள்!💐

ஒரு அற்புதமான கட்டமைப்பு, சொல்லாடலுடன் கூடிய ஓர் படைப்பு இன்றைய புதிர்! 👏🏼

வாழையிலையில் பருப்புடன் நெய் கலந்து ,பொறித்த அப்பளம் சேர்த்து சோறுண்ட திருப்தி புதிரின் விடை கண்ட பொழுது!😌

நின் திறன் போற்றுதற்குரியதே! 🙏🏼
************************
_சங்க இலக்கியத்தில் மலைகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன._
_குன்று, *வரை* என்று அவை குறிப்பிடப்படுகின்றன_

. அந்த மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றியும், அப்பகுதியை ஆண்ட அரசனைப் பற்றியும், அந்த மலையின் நிலவளம் பற்றியும் குறிப்புகள் வருகின்றன.
************

_மூட்டை சுமக்குமிடத்தில் மேகம் மலையிறங்கி ஒரு பருப்பு சுமக்கும் (4)_
******
_மேகம்_ = *முகில்*
_மலை_ = *வரை*
_ஒரு பருப்பு_
= *துவரை*
*******
Now we will proceed to crack this riddle! 😌

_மலையிறங்கி ஒரு பருப்பு_ = *துவரை- வரை*
( துவரையில் வரை இறங்கி செல்ல மிஞ்சியது து)
= *து*

_மேகம் மலையிறங்கி ஒரு பருப்பு சுமக்கும்_
= *முகில்* *து* வை சுமக்கும்! எங்கே? 👇🏽
= *முதுகில்* 😂

_மூட்டை சுமக்குமிடத்தில்_
= *முதுகில்*
************************
Muthu said…
அருமையான புதிருக்கு அருமையான விளக்கம்!
Muthu said…
மூளைக்கும், தமிழறிவுக்கும் நல்ல விருந்து! மூட்டை சுமக்கும் இடம் என்பது முதுகு என்று உடனே தெரிந்து விட்டது; பின் அங்கு மேகம் மலையிறங்கவும் ஒரு பருப்பு சுமக்கவும் 2 மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்