உதிரிவெடி 3651 (ஏப்ரல் 24, 2019)
வாஞ்சிநாதன்
*****************
. இரண்டாண்டுகள் தினம் புதிரையளித்ததைப் பாராட்டி
ரவி சுப்ரமணியனும், புதியதாக வந்துள்ள ராம்கி கிருஷ்ணன் என்பவரும் பாராட்டுகளை நேற்று இவ்வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. இந்த ரீதியில் வரும் 2021 ஏப்ரலில் இல் சமூகத்தில் நாலு பேர் பாராட்டும்படி பேர் பெற்றவனாகிவிடுவேன்!
ரோம் எரிந்த போது வயலின் வாசித்த மனிதனைப் பற்றி நேற்று புதிர் பேசியது, ஒரு மிருகத்தைப் பற்றி இன்று:
ஒரு விலங்கிடம் கருணை காட்டும் குணம் (4)
Comments
--------------------------------------
நேராக பார்க்கும் ஆண்கள், “என் வைப்தான் உங்க கதையெல்லாம் படிப்பா. எனக்கு அதுக்கெல்லாம் நேரம் கிடையாது”. மற்றபடி எனக்கு வரும் வாசகர் கடிதங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. சமீபத்தில் முடிந்த தங்களது கணேஷ்/வசந்த் தொடர்கதையை குமுதத்தில் படித்தேன். அற்புதம். நானும் தற்சமயம் வெல்டிங் டிப்ளோமா முடித்திருக்கிறேன். BELல் ஒரு வேலை வாங்கித்தர முடியுமா?
2. நானும் உங்கள் கதைகளை மிகவும் ரசித்து படித்து வருகிறேன். இக்கடிதத்துடன் வரசித்தி விநாயகர் கோவிலில் உங்களுக்காக அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி இருக்கிறேன். சாய் பாபா படமும் இணைத்திருக்கிறேன். தினமும் வைத்துப் பூஜிக்கவும். உங்களுக்கும், உங்கள் மனைவி குழந்தைகளுக்கும் நல்லது நடக்கும்.
உண்மையான வாசகர்கள் கடிதங்கள் எழுதுவதில்லை.
-------------------------------------
மின் அஞ்சலும், வலைப்பக்கங்களும் கருத்துத் தெரிவிப்பதை மிகவும் எளிதாக்கி இருந்தாலும், உருப்படியான பின்னூட்டங்களை அளிப்பவர்கள் எண்ணிக்கை குறைவுதான். நானும் கூடத் திருந்த வேண்டும். :-)
இன்னும் நூறாண்டுகள் வெடிகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்க வாழ்த்துக்கள். இவ்வெடிகள் மூலம் உறவுகளுடன் உறவாட அடிக்கடி ஒரு வாய்ப்பு உருவாவதால் நன்றிகளும் பல. :-)
"என் வைஃப்தான் படிப்பா" என்று நீங்கள் குறிப்பிட்டதில் சுஜாதா இன்னமும் அவருக்கே உரித்தான பாணியில் சொல்லியிருப்பார்: " கொஞ்சம் தட்டினால் என்னுடைய கதைகள் விவரம் எல்லாம் சொல்லிவிடுவார்"
வலைதளத்தில் வெளியிட்ட
செய்தி பின் காணப்படவில்லை
அச்செய்தி����
*உதிரிவெடி இரண்டாம் ஆண்டு நிறைவு*
***********************************************
*கதிர்கூட பலகாலை முகிலின்பின்*
*முகம்மறைக்கும்*
*புதிரின்றி புலராது ஒருநாளும்−புதிர்வெடி*
*வனப்புடன் அவதாரம் எடுக்கவே ;*
**வாஞ்சி*
*முனைப்புடன் செதுக்கிடுவார்*
*முகமலர்ந்து!*
நாங்கள் பாராட்டுவதா பெரிது? உங்களை பாராட்டி வானுலகம் வான் மழை பெய்ததாக படித்தேன்!
வள்ர்க உங்கள். புதிரான பணி!
சதிராடும் கூட்டம் நாங்கள்
ஈரடி வைத்து நடை பயின்று
முற்றத்தில் முத்தாடி பின்
மூவர் உலா காண வரும்
வாஞ்சியின் குழவி உதிரிவெடி
வாழ்க வளர்க என வாழ்த்துகிறேன்!