Skip to main content

உதிரிவெடி 3647

உதிரிவெடி 3647 (ஏப்ரல் 20, 2019)
வாஞ்சிநாதன்
****************


உதிரிவெடிப் புதிர்கள்  தொடங்கி வரும் திங்கட்கிழமை  ஏப்ரல் 22இல் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகப் போகிறது.
இப்புதிர்ப் பக்கங்களை ஆரம்பகாலத்திலிருந்து எட்டிப் பார்த்துவரும் ஒருவர் இத்தேதியைக் கணக்கிட்டு  இத்தருணத்தில் உதிரிவெடியைப் பற்றிப் பாராட்டி எழுதியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

 நாளொன்றுந் தட்டாமல் நல்ல புதிரினை
வாளொத்த கூர்மதியால் வார்த்தளித்த வாஞ்சியே
ஆண்டிரண்டு  ஆனபின்னும் ஆயிரம்நீ  தந்திடவே
வேண்டினோம் மேலும் வெடி.

கல்யாணங் காட்சியொடு துக்கம் விசாரித்தல்
எல்லாப் பணிகட்  கிடையிலும் உன்புதிரை
நில்லாமல்  நித்தமும் நீசெய்தாய் சாதனை  
வல்லவனே இன்றுரைத்தோம் வாழ்த்து.

 மேற்கண்ட வெண்பாக்களை எழுதியவர் மிகவும் அடக்கமானவர்! தன் பெயர்  குறிப்பிடாமல் வெளியிடவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

சரி,  இன்றைய ஆட்டத்திற்கு வருவோம்:

கல்யாணத்தில் ரகளை தலைகாட்ட எல்லோரும் ஒருமுறை சந்திக்க வேண்டியது (4)













Comments

உதிரிவெடி வெற்றிகரமாக தொடரட்டும்
Vanchinathan said…
தொடர்வதென்ன, ஓடிக் கொண்டே இருக்கலாம். வெடி வெளியிடும்போது வேறு நான் கூடவே எழுதினாலும் அதைப் படிப்பவர் நீங்கள் என்று தெரிகிறது. உங்களைப்போல் படிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள். "ஈற்றடி என்னும் இனிப்பு" என்ற வாட்ஸப் குழுவில் இருந்தால் மட்டுமே நல்ல வெண்பாக்கள் நிறைய காணலாம். இங்கேயும் அவ்வப்போது வரும்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்