இன்றைய தினம் காலையில் வெளியிட்ட புதிர்:
பட்டினியைப் போக்கும் திருக்குறளின் நடுப்பகுதி சிக்க குற்றஞ் சுமத்து (4)
இதற்கான விடை: சாப்பாடு = சாடு + ப்பா ('முப்பால்" என்பதிலிருந்து)
இன்று அளிக்கப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
பட்டினியைப் போக்கும் திருக்குறளின் நடுப்பகுதி சிக்க குற்றஞ் சுமத்து (4)
இதற்கான விடை: சாப்பாடு = சாடு + ப்பா ('முப்பால்" என்பதிலிருந்து)
இன்று அளிக்கப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
*சாடு* வினைச்சொல் சாட, சாடி
குற்றம் சுமத்தி கடுமையாக விமர்சித்தல் .
"குடும்பத்தின் மேல் அக்கறை இருந்தால் இப்படிக் குடிப்பீர்களா?’'என்று மனைவி *சாடினாள்.*
*************************
_*சாடி* னவர் களெல்லாம்_
_*ஓடி* மறைந்தனர் எங்கோ_
_*நாடி* தஞ்சமென்றோர்க்கு_
_*தேடி* உணவளிப்போம்_
_*கூடி* நாமனைவரும் வாரீர்!_
*************************
_பட்டினியைப் போக்கும் திருக்குறளின் நடுப்பகுதி சிக்க குற்றஞ் சுமத்து (4)_
_திருக்குறள்_
= *முப்பால்*
_நடுப்பகுதி_
= [மு] *ப்பா* [ல்]
= *ப்பா*
_குற்றஞ் சுமத்து_
= *சாடு*
_நடுப்பகுதி சிக்க_
= *ப்பா ---> சாடு*
= *சா+ப்பா+டு*
= *சாப்பாடு*
= _பட்டினியைப் போக்கும்_
*************************
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி த் துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை
கருத்தளித்த எல்லோருக்கும் நன்ரி.