Skip to main content

விடை 3657 ***

இன்றைய  தினம் காலையில் வெளியிட்ட புதிர்:
பட்டினியைப் போக்கும் திருக்குறளின் நடுப்பகுதி சிக்க குற்றஞ் சுமத்து  (4)
இதற்கான விடை:  சாப்பாடு = சாடு + ப்பா  ('முப்பால்" என்பதிலிருந்து)


இன்று அளிக்கப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…

*************************
*சாடு* வினைச்சொல் சாட, சாடி
குற்றம் சுமத்தி கடுமையாக விமர்சித்தல் .
"குடும்பத்தின் மேல் அக்கறை இருந்தால் இப்படிக் குடிப்பீர்களா?’'என்று மனைவி *சாடினாள்.*
*************************
_*சாடி* னவர் களெல்லாம்_
_*ஓடி* மறைந்தனர் எங்கோ_
_*நாடி* தஞ்சமென்றோர்க்கு_
_*தேடி* உணவளிப்போம்_
_*கூடி* நாமனைவரும் வாரீர்!_
*************************
_பட்டினியைப் போக்கும் திருக்குறளின் நடுப்பகுதி சிக்க குற்றஞ் சுமத்து  (4)_

_திருக்குறள்_
= *முப்பால்*

_நடுப்பகுதி_
= [மு] *ப்பா* [ல்]
= *ப்பா*
_குற்றஞ் சுமத்து_
= *சாடு*
_நடுப்பகுதி சிக்க_
= *ப்பா ---> சாடு*
= *சா+ப்பா+டு*
= *சாப்பாடு*
= _பட்டினியைப் போக்கும்_
*************************
சாப்பாடு சாடு கெடைச்சது. ப்பா தடுமாற்றம்தான். இருந்தாலும் சும்மா ஒரு சேப்டிக்கு போட்டு வெக்கலாம் ன்னு போட்டு வெச்சேன். பட்டா பாக்கியம், படாட்டி லேகியம் ன்னு. பட்டுடுத்து.
Muthu said…
நல்ல "திசை திருப்பும்" கட்டமைப்பு! பசிக்கும் பட்டினிக்கும் என்ன வேறுபாடு என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன். சாடு என்றால் குற்றஞ்சுமத்துவது என்றாகுமா என்றும் அகராதிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பட்டினியப் போக்கும் திருக்குறள் "விருந்தோம்பலோ" என்று சிந்தித்தேன். விடையும் சாப்பாடும் கண்ணில் பட்டாலும், அனுப்ப தைரியம் இல்லாமல் ஒதுங்கி விட்டேன்!
Anonymous said…
நான் "ப்பா" எடுத்தது :

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி த் துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை
K.Kanagasabapathy said…
நான் கனகசபாபதி
Vanchinathan said…
குற்றஞ் சுமத்துதல் பற்றி இருந்ததால் புதிரில் "அப்பாவி" இருந்தால் நன்றாக இருக்கும் என்று முதலில் "அப்பாவி இடையணைத்து" என்று எழுதினேமன். ஆனால் மிகவும் எளிதாகிவிடும் என்று தோன்றியதால் அப்பாவியை விடுவித்து முப்பால் வழியாக அதைக் கொணர்ந்தேன். இதன் மூலம் புதிர் சுவாரசியமாகியிருக்கிறதென்று இப்போது தெரிகிறது.

கருத்தளித்த எல்லோருக்கும் நன்ரி.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்