Skip to main content

விடை 3645

இன்று காலை வெளிவந்த வெடி:
ஒருவருக்குரிய வாக்குச்சாவடியில் இருக்கும் குணம் (3)

இதற்கான விடை:  தன்மை = தன்  மை


இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலம்.

நன்மை தருவரோ நாட்டைச் சுருட்டுவரோ 
தன்மை தெரியாமல் தம்வாக் களித்திடுவர்
ஆயிரத்தைப் பாங்காய் அளித்திடும் கட்சிக்கு
தீயிட்டார் கொள்கை தெரிந்து

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
புத்தாண்டு தினத்தன்று *_வேற்றுமையில்_* விழிகளை அழகூட்டும் *மை* கண்டோம். இன்று *_தன்மையில்_* விரல்களில் அழியா *மை* கான்கிறோம். ஒன்று *_அழகூட்டும் மை_* ; மற்றொன்றோ *_அழியா மை!_*

*பெருமை* சேர்க்கும் வகையில் *வளமை* யான ஆசிரியரின்
*புலமை* களை தொடர்ந்து *பொறுமை* யுடன் காண்போம்! இரசிப்போம் 😌
****************
_ஒருவருக்குரிய வாக்குச்சாவடியில் இருக்கும் குணம் (3)_

_ஒருவருக்குரிய_
= *தன்*

_வாக்குச்சாவடியில் இருக்கும்_
= *மை*

_குணம்_
= *தன்+மை*
= *தன்மை*
*************************.