இன்று காலை வெளியான வெடி:
அழகை வெளியேற்றிய ரகளை வெளியே விட்டு வெளியேறச் செய் (4)
வெடியிதற்கு எச்சொல் விடையென்று கேட்போர்
படித்திடுவீர் வெண்பாவைப் பாங்காய் -- துடிப்பாய்
விரட்டிப் பிடித்தோர்க்கு வெற்றியாம் வீணாய்த்
துரத்தியோர் வாய்ப்பிழந்தார் தோற்று.
அழகை வெளியேற்றிய ரகளை வெளியே விட்டு வெளியேறச் செய் (4)
வெடியிதற்கு எச்சொல் விடையென்று கேட்போர்
படித்திடுவீர் வெண்பாவைப் பாங்காய் -- துடிப்பாய்
விரட்டிப் பிடித்தோர்க்கு வெற்றியாம் வீணாய்த்
துரத்தியோர் வாய்ப்பிழந்தார் தோற்று.
Comments
அழகு
அழகை போற்றாதவர், பாடாதவர்,ஆராதிக்காதவர் எத்தனை பேர் இருக்கின்றனர்?.
ரகளை செய்து அழகை வெளியேற்ற இயலுமா?
ரகளையில் சில சமயம் புறவழகு தேயலாம். ஆனால் அகவழகை ரகளை என் செய்யும்!
🌺🌺🌺🌺🌺🌺🌺
_அழகை வெளியேற்றிய ரகளை வெளியே விட்டு வெளியேறச் செய் (4)_
_அழகு_ = *களை*
_வெளியேற்றிய ரகளை_
= *ரகளை - களை*
= *ர*
_வெளியே விட்டு_
= _*ர* விற்கு வெளியே *விட்டு*_
= *ர --> விட்டு*
= *விரட்டு*
_வெளியேறச் செய்_
= *விரட்டு*
************************
கம்பரின் நோக்கில் இராமனின் அழகு
மையோ மரகதமோ
கம்பரே சொற்கள் கிடைக்காமல் தடுமாறிய இடம் உண்டு. இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். கவிதையால் வடிக்க இயலாத அழகு இராமனின் அழகு. இராமனின் அழகுக்குப் பல உவமைகளை வரிசையாகக் கூறுகிறார். என்றாலும் அந்த அழகை
வார்த்தைக்குள் கொண்டு வரமுடியவில்லை. இறுதியில் *‘ஐயோ’* என்கிறார்.
பாடல் இதோ:
வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாள்ஓடும் இளையான்ஓடும் போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர் அழியாஅழகு உடையான்.