Skip to main content

விடை 3459

இன்று காலை வெளியான வெடி:
வாயை மூடி பணி செய்ய முடியாதவன் முதலில் பாய்ந்து செய்ய வேண்டிய பணி மாற்றம் (4)
இதற்கான விடை: பாடகன்   (கடன் = கடமை, செய்ய வேண்டிய பணி)


Comments

Raghavan MK said…
UyA peek into today's riddle! *************************
*கடன்* பிரச்சனை சங்ககாலத்திலேயே இருந்திருக்கிறது. அதையும் ஒரு பெண் எடுத்து எழுதியிருக்கிறார். அவர் பெயர் *_பொன்முடியார்_* ஒருவரிடம் இருந்து வாங்கினால்தான் அது கடன் என்பதில்லை. *நாம் செய்ய வேண்டிய கடமை என்பதே ஒரு கடன்* என்று எண்ணும் உயர்ந்த பண்புடைய காலத்தவர் இவர். செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத ஒவ்வொருவரும் கடன்காரரே என்ற இவரது கருத்து மிகச் சிறந்தது.

_ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே_
_சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே_
_வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே_
_நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே_
_ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி_
_களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக்_ _கடனே_
*நூல் – புறனானூறு*
திணை – வாகை
துறை – மூதில்முல்லை

பெற்று நான்கு பேர் பார்க்க சிறப்பாக வளர்ப்பது ஒரு தாயின் கடன்(கடமை)
பிள்ளைக்குத் தக்க கல்வியைக் கொடுத்து சான்றோனாக்குவது தந்தையின் கடன்(கடமை)
செயலுக்குரிய வேல் போன்ற கருவிகளைச் செய்து கொடுத்தல் கொல்லற்கு கடன்(கடமை)
நல்ல நெறிமுறைகளை நடைமுறைகளை செயல்படுத்துவது அரசாள்கின்றவரின் கடன்(கடமை)
கடமை என்னும் போரில் களிறு போன்ற பிரச்சனைகளை வென்று மீளல் பிள்ளைகளின் கடன்(கடமை)🙏🏼
💐💐💐💐💐💐💐
_வாயை மூடி பணி செய்ய முடியாதவன் முதலில் பாய்ந்து செய்ய வேண்டிய பணி மாற்றம் (4)_

_முதலில் பாய்ந்து_ = *பா*
_செய்ய வேண்டிய பணி_ = *கடன்*
(ஒருவருக்கு மற்றொருவர் கடமைப்பட்டிருப்பது.

‘பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடன்(பணி)' )

_மாற்றம்_ = *பா+கடன்=பா+டகன்* = *பாடகன்*

_வாயை மூடி பணி செய்ய முடியாதவன்_ = *பாடகன்*
*********************
_கேளடி கண்மணி *பாடகன்* சங்கதி_
_நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி_
_நாள் முழுதும் பார்வையில் நான்_ _எழுதும்_
_ஓர் கதையை_ _உனக்கென நான் கூற_
🎼🎼🎼🎼🎼🎼🎼
என்றேனும் ஒரு நாள்
நான் *பாடகனாகி* விடுவேனென்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது
உன் கொலுசு சொல்லும்
மெட்டை என்னால்
பாடமுடியாதா என்ன!!!
( மனோ )
*************************
*பாடகன்*
பாதையோரப் பாடகன்
ஆனேன் !
மேடையேற வாய்ப்புக்
கிடைக்காத
நான் ! 😢😢😢
(முகில்)
🎼🎼🎼🎼🎼🎼🎼
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

1) 6:02:40 இரா.செகு
2) 6:04:59 KB
3) 6:12:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
4) 6:43:33 ராஜா ரங்கராஜன்
5) 6:44:48 ஆர்.நாராயணன்.
6) 6:46:00 ரவி சுந்தரம்
7) 6:46:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:46:53 திருமூர்த்தி
9) 6:48:06 சுந்தர் வேதாந்தம்
10) 6:53:58 கேசவன்
11) 7:00:06 நாதன் நா தோ
12) 7:01:00 லக்ஷ்மி ஷங்கர்
13) 7:01:43 சங்கரசுப்பிரமணியன்
14) 7:03:04 ராஜி பக்தா
15) 7:07:28 பிரசாத் வேணுகோபால்
16) 7:08:16 மீனாக்ஷி கணபதி
17) 7:23:28 கி மூ சுரேஷ்
18) 7:33:24 மு கபாரதி
19) 7:34:16 எஸ்.பார்த்தசாரதி
20) 8:04:26 ஹரி பாலகிருஷ்ணன்
21) 8:15:24 K.R.Santhanam
22) 8:22:46 ராமராவ்
23) 8:58:44 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 11:39:42 சுபா ஸ்ரீநிவாசன்
25) 12:16:07 ராஜி ஹரிஹரன்
26) 12:22:45 எஸ் பி சுரேஷ்
27) 12:38:04 சாந்தி நாராயணன்
28) 15:26:25 தேன்மொழி
29) 15:53:03 ராதா தேசிகன்
30) 18:32:33 கோவிந்தராஜன்
31) 20:12:26 சதீஷ்பாலமுருகன்
32) 20:48:12 வி ன் கிருஷ்ணன்
**********************
Raghavan MK said…
If l remember correct between9.30 a.m. and 9.45 a.m. l posted my answer.
But it seems my name has been left out.
Don't know whether l have pressed the submit correctly or not.
If you don't mind pl check up!
Muthu said…
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் திரு நாவுக்கரசர். அப்படியானால் "கடன்" வேறு, "பணி" வேறா?
Vanchinathan said…
வேலை (சேவை) செய்வதே எனக்கு இடப்பட்ட பணி என்று இதைப் பொருள் கொள்ளலாம்.
Muthu said…
நன்றி!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்