Skip to main content

விடை 3477

விடை 3477

இன்று காலை வெளியான வெடி
பதினான்காண்டுகள் ராணியாய் இருந்தவள் மறைந்த இரண்டாம் ஆண்டு தொடக்கம் (4)  

இதற்கான விடையைக் கீழ்க்காணும் வெண்பாக்கள் மூலம் 
புரிந்து கொள்ளலாம். (சத்தியாமய் நான்தான் எழுதினேன். மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்க வில்லை).

ஆண்டு பதினான்காய் அண்ணன் வனவாசம்
ஆண்டான் அயோத்தியை தம்பி பரதனும்
மீண்டும் பெரியோன் வரும்வரை வீற்றிருந்த
மாண்டவி  மன்னன் துணை.

பிரபவ பின்னே வருமாம் விபவ
மறவாதீர் மாந்தரே இன்று


Comments

Raghavan MK said…
*_இன்றைய புதிரை அவிழ்ப்போமா!_*
************************
இன்றைய புதிர் ஓர் அற்புதமான சொல்லாடல் கொண்ட, கற்பனை வளத்துடன் கூடிய, கட்டமைப்பு!
திசைத் திருப்பிகள் தங்கள் பங்கை செவ்வெனச் செய்து நம்மை திக்கு முக்காட வைத்தது!
Queen Victoria விலிருந்து, சித்தூர் ராணி பத்மினி வரை ,மற்றும் சில இளவரசிகளை யெல்லாம் வலம்வரச்செய்து இறுதியில் இதிகாசத்திற்கே அழைத்து சென்று விட்ட *புதிராசியருக்கு வாழ்த்துக்கள்!* 💐💐
🌺🌺🌺🌺🌺🌺🌺
_பதினான்காண்டுகள் ராணியாய் இருந்தவள் மறைந்த இரண்டாம் ஆண்டு தொடக்கம் (4)_  

_மறைந்த_ = *மாண்ட*

_இரண்டாம் ஆண்டு_ = *விபவ*

(‌ 60 ஆண்டு வட்டத்தில் _இரண்டாம் ஆண்டு_ *விபவ* .
1. பிரபவ 2. விபவ 3. சுக்ல 4. பிரமோதூத 5. பிரசோற்பத்தி........... )

_தொடக்கம்_
= *வி*(பவ)

_பதினான்காண்டுகள் ராணியாய் இருந்தவள்_ = *மாண்ட+ வி*
= *மாண்டவி*

( _மாண்டவி - பரதனின் மனைவி_ .)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*_Decoding the புதிர் ......_*

அறுபது ஆண்டுகள் _(ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்),_ பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.

இந்த _ஆண்டு வட்டம்_ ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
**************
*_மாண்டவி_* இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். *_பரதனின் மனைவி_* , சீதையின் தங்கை, சீதையின் தந்தையான ஜனகரின் தம்பி குசத்துவஜனின் மூத்த மகள். மாண்டவியின் உடன்பிறந்தவள் சுருதகீர்த்தி.

*பதினான்காண்டுகள்* ராமர் வனவாசம் சென்ற போது அயோத்தியை இளவல் பரதன் ஆள நேரிட்டது.பரதன் அரசனாகவும் மனைவி மாண்டவி அரசியாகவும் ( *ராணி* ) _பதினான்காண்டுகள்_ ஆட்சி செலுத்தினர்!
💐🙏🏼💐
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (32):

1) 6:04:12 கேசவன்
2) 6:05:22 திருமூர்த்தி
3) 6:11:47 சதீஷ்பாலமுருகன்
4) 6:24:24 ஆர்.நாராயணன்.
5) 6:52:08 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 6:58:32 ராமராவ்
7) 7:54:20 மீ கண்ணன்
8) 7:56:49 முத்துசுப்ரமண்யம்
9) 7:58:49 ராஜி ஹரிஹரன்
10) 8:04:23 மீ பாலு
11) 8:06:15 பூமா பார்த்த சாரதி
12) 8:14:20 மாலதி
13) 9:41:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 10:37:28 வி.ஜயா
15) 11:02:34 பூமா பார்த்த சாரதி
16) 11:09:04 மாதவ்
17) 13:45:52 பினாத்தல் சுரேஷ்
18) 14:54:10 மு.க.இராகவன்.
19) 16:02:12 ரவி சுந்தரம்
20) 16:23:26 எஸ் பி சுரேஷ்
21) 16:47:01 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 16:49:32 மீனாக்ஷி
23) 17:00:58 கோவிந்தராஜன்
24) 17:09:17 ரவி சுப்ரமணியன்
25) 17:46:02 ஆர். பத்மா
26) 18:13:29 ரவி சுந்தரம்
27) 18:24:37 சுந்தர் வேதாந்தம்
28) 18:40:30 வானதி
29) 18:51:08 லதா
30) 20:30:26 மு க பாரதி
31) 20:35:39 ஏ.டி.வேதாந்தம்
32) 20:35:59 பத்மாசனி
**********************
உஷா said…

அருமையான சொல்லாடல் மற்றும் குறிப்புகள். ஊகிக்க முடியவில்லை

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்