இன்று காலை வெளியான வெடி:
பல்லுடைந்த வேலி சுற்றியமைக்கப்பட்ட ஒரு மரம் நாட்டியம் (3)
இதற்கான விடை: ஆடல் = ஆல் + படல் - பல்
அறிவிப்பு:
விடையளித்தவர் பட்டியல் சற்று தாமதமாக ஒன்பதரை மணிக்கு மேல் வெளிவரும்.
பல்லுடைந்த வேலி சுற்றியமைக்கப்பட்ட ஒரு மரம் நாட்டியம் (3)
இதற்கான விடை: ஆடல் = ஆல் + படல் - பல்
அறிவிப்பு:
விடையளித்தவர் பட்டியல் சற்று தாமதமாக ஒன்பதரை மணிக்கு மேல் வெளிவரும்.
Comments
*****************
_காற்றுக்கென்ன *வேலி* கடலுக்கென்ன மூடி_
_கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி_ _விடாது_
மனிதன் வாழ்க்கையில் எதற்கெல்லாமோ *வேலி* போடுகின்றான் .குற்றங்களை மறைக்க தனக்குத் தானே வேலி போட்டுக்கொள்கின்றான் .அடக்கமான பெண் கற்பு எனும் வேலியை தானே போட்டுக்கொள்கிறாள் . தன் வீடு, தன் கணவன்,தன் பிள்ளை என்ற வேலியை சுற்றி வருகிறாள் !
**************
*படல்* :
மூங்கில் தப்பைகளைக்கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு.
சேலம் பகுதியில் மூங்கில் படலைக்கொண்டு இல்லங்களுக்கு வேலி அமைக்கின்றனர்.
*****************
*ஆல்* அல்லது ஆலமரம் மரங்களில் மிகவும் அகலமான மரம் . *_அகல்_* என்னும் சொல் *ஆல்* என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை *வீழ்* என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
***********
_ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி_ என்பது பழம் மொழி.
*****************
_பல்லுடைந்த வேலி சுற்றியமைக்கப்பட்ட ஒரு மரம் நாட்டியம் (3)_
_வேலி_
= *படல்*
_பல்லுடைந்த வேலி_
= *ட*
_ஒரு மரம்_
= *ஆல்*
_சுற்றியமைக்கப்பட்ட_
= *ட* வை சுற்றிய *ஆல்*
= *ஆ +ட+ல்*
= *ஆடல்*
= _நாட்டியம்_
*****************
கலைகளில் உயர்ந்த *ஆடல்* கலையில் நல்ல தேர்ச்சிபெற்று, தன் ஈடிணையற்ற கலைத்திறனால் அனைவரையும் பெரிதும் கவர்ந்த ‘ *ஆடலரசி* ’ ஒருத்தியைச் சிலப்பதிகாரம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. அவள் வேறுயாருமல்லள்! ’சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய்’க் கணிகையர் குலத்தில் பிறந்தும் ஒப்பற்ற கற்பரசியாய் வாழ்ந்த ‘மாதவியே’ அம்மாதரசி!
சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்று காதை’ மாதவியின் நாட்டியச் சிறப்பையும், நளினத்தையும் அற்புதமாய் விளக்குகிறது. தேவமகளிரில் ஒருத்தியான ஊர்வசியின் மரபைச் சேர்ந்தவளாய்க் கருதப்படும் மாதவி, ‘ *_ஆடல், பாடல், அழகு’_* என்ற மூன்றிலும் ஒன்றில்கூடக் குறைவுபடாதவள் என்று இளங்கோவடிகளால் போற்றப்படுகின்றாள்.
தன்னுடைய 5ஆம் அகவையில் ’தலைக்கோல் ஆசான்’ என்று அழைக்கப்பெறும் நாட்டிய ஆசிரியரிடம் நடனம் பயிலத்தொடங்கிய அவள் 7 ஆண்டுகள் இடைவிடாப் பயிற்சிக்குப்பின் தன் 12-ஆம் அகவையில் சோழமன்னன் முன்னிலையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை வெகுசிறப்பாய் நிகழ்த்துகின்றாள்
_"ஆடலும் பாடலும் அழகும் என்றிக்_
_கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்_
_ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற்_
_சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி"_
என்று அவள் அரங்கேற்றம் பற்றிப் பேசுகிறது அரங்கேற்று காதை.
****************
*ஆடல்* காணீரோ ஆடல் காணீரோ
விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ
ஆடல் காணீரோ
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ ஓ...🙏🏼
*********
_*ஆடலுடன்* பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்__
**********
புது மொழி!
_முயற்சி செய்! நீ சிறகொடிந்த பின்பும் சிகரம் தொடலாம்!_
_பயிற்சி செய் ! நீ *பல்லிழந்த* பின்பும் பகோடா திண்ணலாம்!_ 😀😀😀
***************
💐🙏🏼💐
1) 6:02:28 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:22 சதீஷ்பாலமுருகன்
3) 6:04:32 வானதி
4) 6:05:22 முத்துசுப்ரமண்யம்
5) 6:08:23 KB
6) 6:09:11 சுந்தர் வேதாந்தம்
7) 6:10:54 லட்சுமி சங்கர்
8) 6:11:11 கி மூ சுரேஷ்
9) 6:13:09 ராஜா ரங்கராஜன்
10) 6:14:10 கலாராணி
11) 6:14:56 கு. கனகசபாபதி, மும்பை
12) 6:14:58 ரவி சுந்தரம்
13) 6:16:14 உஷா
14) 6:19:04 ராமராவ்
15) 6:37:57 விஜயா ரவிஷங்கர்
16) 6:44:59 நாதன் நா தோ
17) 6:45:52 பாலா
18) 6:48:27 ரங்கராஜன் யமுனாச்சாரி
19) 6:50:00 Siddhan Subramanian
20) 6:50:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 6:51:29 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
22) 6:54:57 பிரசாத் வேணுகோபால்
23) 7:00:39 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 7:01:57 தி. பொ. இராமநாதன்
25) 7:02:09 மீனாக்ஷி
26) 7:07:13 மீ பாலு
27) 7:08:47 சுபா ஸ்ரீநிவாசன்
28) 7:25:10 அம்பிகா
29) 7:42:57 கேசவன்
30) 7:44:34 கோவிந்தராஜன்
31) 7:46:52 ஆர்.நாராயணன்.
32) 8:02:54 மு.க.இராகவன்.
33) 8:09:41 மைத்ரேயி
34) 8:13:16 மீ கண்ணன்
35) 8:47:41 மாதவ்
36) 8:49:55 மாலதி
37) 9:38:58 சங்கரசுப்பிரமணியன்
38) 9:44:55 ருக்மணி கோபாலன்
39) 10:08:45 பினாத்தல் சுரேஷ்
40) 10:36:36 ஸ்ரீஜா
41) 10:46:39 இரா.செகு
42) 10:59:43 மு க பாரதி
43) 11:06:44 லதா
44) 11:08:13 ஆர். பத்மா
45) 11:17:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
46) 11:28:32 ராஜி ஹரிஹரன்
47) 12:17:08 ஸௌதாமினி
48) 13:04:33 சாந்தி நாராயணன்
**********************