Skip to main content

விடை 3453


இன்று காலை வெளியான வெடி
இறுதி ஊர்வலம் முன்  பின் செல்ல ஈயாதவன் மனிதனே இல்லை (4)

இதற்கான விடை: மிருகம் = கருமி + ம்
 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (44):

1) 6:03:01 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:13 ரங்கராஜன் யமுனாச்சாரி
3) 6:05:50 நங்கநல்லூர் சித்தானந்தம்
4) 6:08:07 ராமராவ்
5) 6:13:40 முத்துசுப்ரமண்யம்
6) 6:13:52 மீ.பாலு
7) 6:13:53 திருமூர்த்தி
8) 6:14:56 KB
9) 6:15:26 ரவி சுந்தரம்
10) 6:17:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:19:17 சுந்தர் வேதாந்தம்
12) 6:23:33 மு.க.இராகவன்.
13) 6:27:21 சாந்தி நாராயணன்
14) 6:32:00 ஶ்ரீதரன்
15) 6:53:24 ஹரி பாலகிருஷ்ணன்
16) 6:56:05 Siddhan Subramanian
17) 6:56:37 கேசவன்
18) 6:57:07 நாதன் நா தோ
19) 7:03:06 ராஜா ரங்கராஜன்
20) 7:03:12 கோவிந்தராஜன்
21) 7:03:44 உஷா
22) 7:12:20 தி. பொ. இராமநாதன்
23) 7:19:26 மீ கண்ணன்
24) 7:24:19 ஆர்.நாராயணன்.
25) 7:28:23 லக்ஷ்மி ஷங்கர்
26) 7:32:15 அம்பிகா
27) 7:32:30 மீனாக்ஷி
28) 7:41:23 மாலதி
29) 8:12:59 ரமணி பாலகிருஷ்ணன்
30) 8:23:13 கு. கனகசபாபதி, மும்பை
31) 8:37:13 எஸ் பி சுரேஷ்
32) 9:16:41 மீனாக்ஷி கணபதி
33) 9:17:17 சதீஷ்பாலமுருகன்
34) 9:20:14 ராஜி ஹரிஹரன்
35) 10:01:37 வி ன் கிருஷ்ணன்
36) 10:07:39 சங்கரசுப்பிரமணியன்
37) 12:13:31 இரா.செகு
38) 12:32:55 மடிப்பாக்கம் தயானந்தன்
39) 14:30:40 சுபா ஸ்ரீநிவாசன்
40) 17:25:26 மு க பாரதி
41) 18:49:54 அனுராதா ஜெயந்த்
42) 18:50:36 ஏ.டி.வேதாந்தம்
43) 18:51:05 பத்மாசனி
44) 20:17:57 திருக்குமரன் தங்கராஜ்

**********************
Raghavan MK said…


A peek into today's riddle!
*************************
ஓர் முதுமொழி!

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

எட்டிக்காய் பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கருமிக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது. 😞
********************,
திரை வலம்!
🌺🌺🌺
_பூபாள‌ம் இசைக்கும்_ _பூமகள் *ஊர்வலம்*_
_இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே_ !
🌺🌺🌺
_போவோமா *ஊர்கோலம்*_ ....
_பூலோகம் எங்கெங்கும்_ ...
_ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்_
_காலம் யாவும் பேரின்பம்...காணும்_ _நேரம் ஆனந்தம்_
_போவோமா ஊர்கோலம் ...._
_பூலோகம் எங்கெங்கும்..._
🌺🌺🌺
**********************
*குறள்* :863
_அஞ்சும் அறியான் அமைவிலன் *ஈகலான்*_

_தஞ்சம் எளியன் பகைக்கு._

_குறள் விளக்கம்_ :
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிய வேண்டியவற்றை அறியாதவனாய், பிறரோடு இணங்கிப் போகும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்றும் *ஈயாதவனாய்* இருந்தால், அவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.
*************************
_இறுதி ஊர்வலம் முன் பின் செல்ல ஈயாதவன் மனிதனே இல்லை (4)_

_ஈயாதவன்_ = *கருமி*

_முன் பின் செல்ல_
= *கருமி* _முன் பின் செல்ல_
= *மிருக*

_இறுதி ஊர்வலம்_
= *ம்*
_மனிதனே இல்லை_
= *மிருக+ம்*
= *மிருகம்*
*************************
_அவள் ஒரு *கருமி* ..._
_ஆயிரம் வார்த்தைகள்_
_பேச வேண்டிய இடத்தில்_
_தன் இரு கண்விழி அசைவில்_
_பேசி விடிகிறாளே...._
🌺🌺🌺🌺🌺🌺🌺
_தைரியமாக சொல் நீ மனிதன் தானா?_
_மனிதன் தானா?_
_இல்லை!_
_நீ தான் ஒரு மிருகம் -_
_இந்த மதுவில் விழும் நேரம்_
_மனமும் நல்ல குணமும்_
_உன் நினைவை விட்டு விலகும்_
_நீ தான் ஒரு மிருகம் -_
🐂🐄🐘🐪🦒🐃🦓🐅
*எனக்குள்ள இருக்கற மிருக‌ம்*

கணவன்: (கோபமாக), என் கோபத்தை தூண்டாதே!
எனக்குள்ள இருக்கற மிருகத்தை உசுப்பி விட்டுறாதே! ஆமாம்! 

மனைவி: நான் எலிக்கெல்லாம் பயப்படறவ இல்லை!🐀
😃😃
*************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்