Skip to main content

விடை 3968

இன்று காலை வெளியான வெடி:
அந்த வட ஞாயிறை மறைத்தாலும்  இறுதியாக மலருமாம் தாமரை (6)
அதற்கான விடை:  அரவிந்தம் = அந்த + ரவி + ம்

ரவி = வட (மொழியில்) ஞாயிறு
ம் = இறுதியாக மலருமாம்.
அரவிந்தம் என்பதும் வடமொழிச் சொல்லே. கல்கி காலத்தில் "உங்கள் பாதாரவிந்தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்" என்று சமஸ்கிருத புணர்ச்சி விதிப்படி எழுதுவார்கள்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலைக்  காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.



Comments

Raghavan MK said…
***********************
அந்த வட ஞாயிறை மறைத்தாலும்  இறுதியாக மலருமாம் தாமரை (6)

வட ஞாயிறை
= ரவி (வட மொழியில் ஞாயிறு)

இறுதியாக மலருமாம்
= மலருமாம் கடைசி எழுத்து
= ம்

அந்த வட ஞாயிறை மறைத்தாலும்
= ரவி inside அந்த + ம்
= (அ+ரவி+ந்த ) +ம்
= அரவிந்தம்

= தாமரை
***********************
தாமரையின் வேறு சில பெயர்கள்.

கமலம், முளரி, பதுமம், 
முண்டகம், அம்போருகம், 
நளினம், வாரிசாதம், புண்டரிகம்,புண்டரீகம், அம்புஜம், பங்கஜம், அரவிந்தம்.
***********************
_அபிராமி அந்தாதி_

*அதிசயம் ஆன வடிவுடையாள் (பாடல் 17)*

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்
மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே
Muthu said…
This comment has been removed by the author.
Muthu said…



அரவிந்தம் என்ற சொல்லக்கூடிய கேட்டாலே என் மனதில் எழும் எண்ணங்கள் இரண்டு>
1. அரவிந்த கோஷ்; 2. குணசுந்தரி படத்தில் வரும் இந்தப் பாடல் வரிகள்: https://youtu.be/NWlD2U2La70?t=72 (ஏ. எம். ராஜா - பி. சுசீலா)

பெண்: *அரவிந்த மலரோடு* அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்

ஆண்: இல்லை ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
அரவிந்தம் உதயமானாள்

https://youtu.be/NWlD2U2La70?t=72
Vanchinathan said…
உங்களுக்கு குண சுந்தரி. வேறொருவர் இப்புதிரைப் படித்து விட்டு என்ன இன்றைய புதிர் அரவிந்த் கேஜ்ரிவால், பாரதிய ஜனதா, திமுக என்று ஒரே அரசியல் நெடியாக இருக்கிறதே என்று என்னைக் கேட்டார்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்