Skip to main content

விடை 3970


இன்று காலை வெளியான வெடி:
துயரத்தின்போது தெம்பளிக்கும்படி ஆளுக்கு ஒன்று வைக்கும் முன்னே குணமாகு (5)

அதற்கான விடை:   ஆறுதலாக = ஆறு + தலா + க

ஆறு = குணமாகு ( காயம் ஆறிவிட்டது)
தலா = ஆளுக்கு
ஒன்று = க

தேறுதலாக என்றும் பலர் விடை அனுப்பியுள்ளார்கள்; தேறு என்பது குணமாகு என்பதற்குப் பொருத்தமான சொல். ஆனால் "ஆறுதலாகப் பேசினார்" என்பது போல் "தேறுதலாகப் பேசினார்" என்று ஏதும் புழக்கத்திலில்லை.





இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
ஆறு (பெ)
பொருள் :
குணமாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
சரியாகு (உடல் ஆரோக்கிய நிலை தொடர்பாக)
***********************
ஆறுதலாக வா?
இல்லை தேறுதலாக வா?
என்று குழம்பி, இறுதியில்
ஆறுதலாக என்று விடையளித்து
என்னை நானே தேற்றிக்கொண்டேன்,எப்படியும் ஒரு ஆறுதல் பரிசு கிடைக்காமலா போய்விடுமென்று !
*********************** துயரத்தின்போது தெம்பளிக்கும்படி ஆளுக்கு ஒன்று வைக்கும் முன்னே குணமாகு (5)

குணமாகு = ஆறு
ஆளுக்கு = தலா
ஒன்று = க

ஆளுக்கு ஒன்று வைக்கும் முன்னே குணமாகு
=ஆறு+தலா+க
= ஆறுதலாக

= துயரத்தின்போது தெம்பளிக்கும்படி
( ஆறுதலாக நாலு வார்த்தை பேசிட்டு வந்தேன்)
***********************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்