Skip to main content

விடை 3985


இன்று காலை வெளியான வெடி:
முகத்திலிருப்பதுக்கு முன் அங்கே உள்ளிருப்பது போக்குவரத்து சாதனம் (3)
அதற்கான விடை: நாவாய் = நா + வாய்,
 வாய் = முகத்திலிருப்பது; நா = வாயிலிருப்பது.
நாவாய் = படகு
ஏற்கனவே இப்பாடலை  இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். வெண்ணிக் குயத்தியார் எழுதியது, "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழிலாண்ட  உரவோன் மருக ...", புறநானூற்றில் உள்ள பாடல்.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

திரைகட லோடித் திரவியம் சேர்த்துக்
கரைவருவேன் வேண்டாம் கவலை! - உரைத்தேனென்
பாவாய்! உனக்குப் பயமேன்? தொலைவிலில்லை
நாவாயில் நான்திரும்பும் நாள்.

எல்லா வளமும் இறைவன் திருவருளால்
இல்லம் கொணர்ந்திடுவேன் என்னுயிரே!- செல்லமாய்ப்
பூவாய் மலர்ந்தேநீ புன்னகைப்பாய் தூரமில்லை
நாவாயில் நான்திரும்பும் நாள்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.