Skip to main content

விடை 3504


இன்று காலை வெளியான வெடி:
பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5)
இதற்கான விடை: வெடிகுண்டு = வெகுண்டு + படித்து - ‍ பத்து

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:08:44 பா நடராஜன்
2) 6:09:02 திருமூர்த்தி
3) 6:09:26 ராஜா ரங்கராஜன்
4) 6:09:32 எஸ்.பார்த்தசாரதி
5) 6:10:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:10:57 பிரசாத் வேணுகோபால்
7) 6:11:19 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:11:55 முத்துசுப்ரமண்யம்
9) 6:13:24 KB
10) 6:13:33 கி மூ சுரேஷ்
11) 6:17:37 லக்ஷ்மி ஷங்கர்
12) 6:23:30 மீ கண்ணன்
13) 6:23:38 கேசவன்
14) 6:24:08 சதீஷ்பாலமுருகன்
15) 6:27:17 ஆர். பத்மா
16) 6:29:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
17) 6:30:30 உஷா
18) 6:31:44 வி ன் கிருஷ்ணன்
19) 6:33:31 சங்கரசுப்பிரமணியன்
20) 6:41:17 ராமராவ்
21) 6:43:57 கு.கனகசபாபதி, மும்பை
22) 6:44:30 ஹரி பாலகிருஷ்ணன்
23) 6:47:53 மடிப்பாக்கம் தயானந்தன்
24) 7:05:59 எஸ் பி சுரேஷ்
25) 7:17:16 கோவிந்தராஜன்
26) 7:24:38 ஆர்.நாராயணன்.
27) 7:25:53 பானுபாலு
28) 7:26:39 அம்பிகா
29) 7:37:57 Sandhya
30) 7:41:33 மாலதி
31) 7:42:32 மு க பாரதி
32) 7:48:08 மீனாக்ஷி
33) 7:51:54 திருக்குமரன் தங்கராஜ்
34) 7:55:28 பாலா
35) 8:05:04 Sandhya
36) 8:12:37 இன்னமுதம்
37) 8:13:34 ராஜி ஹரிஹரன்
38) 8:14:15 தி. பொ. இராமநாதன்
39) 8:16:01 ரவி சுந்தரம்
40) 8:17:57 சுந்தர் வேதாந்தம்
41) 8:19:40 Siddhan Subramanian
42) 8:20:19 பாலு மீ
43) 8:26:35 பினாத்தல் சுரேஷ்
44) 8:33:58 மாதவ்
45) 8:42:23 Suba Srinivasan
46) 8:49:41 தேன்மொழி
47) 9:49:39 லதா
48) 10:36:32 ருக்மணி கோபாலன்
49) 10:54:41 இரா.செகு
50) 11:30:20 வானதி
51) 12:35:16 மு.க.இராகவன்.
**********************
Raghavan MK said…
A peek into today's riddle! ***********************
_செறுவா் நோக்கிய கண்டன்_
_சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே_
(புறம் 100, 10-11)

புறநானுாற்றில் இடம்பெறும் இவ்வாிகளில் ஒளவையாா் அருமையானதொரு காட்சியை காட்டி நிற்கின்றாா்.அதியமான் நெடுமானஞ்சிக்கு ஆண்மகவு பிறந்துள்ளது.பகைவரை *வெகுண்டு* பாா்த்த கண்கள் புதல்வரைக் கண்டும் சிவப்பு மாறாமல் இருந்ததென குறிப்பிட்டு சினத்தின் வெளிப்பாட்டை காட்சி படுத்தியுள்ளதை ஈண்டு காணமுடிகிறது.

பிறந்திருக்கும் மகனைப் போர்க்கோலத்துடன் வந்து பார்க்கிறான் அரசன் அஞ்சி. கையிலே வேல். காலிலே வீரக்கழல். உடலிலே வியர்வை. கழுத்திலே பகைவர் வெட்டிய புண். பித்தை என்னும் உச்சிச்சிண்டு போட்ட தலையிலே ஊசியால் கோத்து வளைத்துக் கட்டிய பனம்பூக் கண்ணி. இந்தப் பூவோடு வெட்சிப் பூவும், வேங்கைப் பூவும் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்தது. வரிப்புலி தாக்கிய வலிமை மிக்க களிறு (ஆண்யானை) போல மாறாத  சினத்துடன் காணப்படுகிறான். பகைவரை *வெகுண்டு* பார்த்த அவன் கண்ணின் சிவப்பு இன்னும் மாறவில்லை. இவனைத் தாக்கியவர் பிழைத்தவராக மாறப்போவது இல்லை.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது (5)_

_கற்றுக்கொண்டு_
= *படித்து*

_பத்து போக_
= *படித்து- பத்து*
= *டி*

_கோபமடைந்து_
= *வெகுண்டு*

_வன்முறையாளர்கள் வீசுவது_
= *வெகுண்டு+டி*
= *வெடிகுண்டு*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*_புறநானுாற்றுப் பாடல்_*

_கையது வேலே; காலன புனை கழல்;_
_மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;_
_வட்கர் போகிய வளர் இளம் போந்தை_
_உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,_
_வெட்சி மா மலர்,வேங்கையொடு விரைஇ_ ,                
_சுரி இரும் பித்தை பொலியச் சூடி,_
_வரிவயம் பொருத வயக் களிறு போல,_
_இன்னும் மாறாது சினனே; அன்னோ!_
_உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே ;_
*_செறுவர் நோக்கிய கண், தன்  சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே._*

(அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை *ஔவையார்* பாடியது.)
💐🙏🏼💐
***********************
வன்முறையின்
தொடக்கம்
நிலத்தில்
தவறி
விழுந்த
குழந்தையை....

சமாதனப்படுத்த
தரையை
அடிக்க
சொல்லி
கொடுப்பது
தான் !!!

(தேன்மொழி)
***********************
சிறு திருத்தம்: கற்று = படித்து. பத்து போக கற்று = டி; கோபம் கொண்டு = வெகுண்டு. Substituting these we get : டி கொண்டு வெகுண்டு = வெடிகுண்டு = வன்முறையாளர்கள் வீசுவது.

கற்று கொண்டு = படித்து என்று பிரித்தால், கொள்ளும் குறியீடு (containment indicator) மறைந்து விடும்.

பத்து போகக் கற்றுக்கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது

கற்று = படித்து, ஆகவே

பத்து போக படித்து கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது

பத்து போக படித்து = டி, ஆகவே

டி கொண்டு கோபமடைந்து வன்முறையாளர்கள் வீசுவது

கோபமடைந்து = வெகுண்டு ஆகவே

டி கொண்டு வெகுண்டு வன்முறையாளர்கள் வீசுவது

டி கொண்டு வெகுண்டு = வெடிகுண்டு ஆகவே

வெடிகுண்டு வன்முறையாளர்கள் வீசுவது ஆகவே

வெடிகுண்டு = வெடிகுண்டு LHS = RHS, QED.







Muthu said…
<> உண்மை! நம்மை அறியாமலே நம்மில் பலரும் செய்த ஒரு தவறு இது!!
Muthu said…
புதிரில் "கற்றுக்கொண்டு" என்றுதான் குறிப்பு இருக்கிறது; "கற்று கொண்டு" என்று இல்லை. ஆகவே .............
Anonymous said…
ரவி சுந்தரம் சொல்வது போல், கற்றுக்கொண்டு = படித்து என்று எடுத்துக்கொண்டால், there will be no containment indicator. So, you will end up with டிவெகுண்டு. எனவே வெடி வெடிக்காது. :-)

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...