Skip to main content

தொண்டை நாட்டில் ஒரு சோதனை

தொண்டை நாட்டில் ஒரு சோதனை

வாஞ்சிநாதன்

இதுவும் ஒரு புதிர்தான். இந்த சங்க காலக் கதையைப் படித்து விட்டு 
கடைசியாகக் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடை  கண்டுபிடியுங்கள்.


தொண்டை நாட்டு மன்னர், இளவரசிக்கு நல்ல தமிழ் கற்பிக்க
அவைப்புலவரான பூதநாதனாரை அழைத்து தக்க ஆசிரியரைக் கண்டறிந்து சொல்லும்படி ஆணையிட்டார்.

பெருஞ்சாத்தன், அழிசி, ஆதிமந்தி,  எழினி,  நெடுமான் ஆகியோரில் ஒருவரை ஆசிரியராக நியமிக்க எண்ணி அவர்கள் ஐவரையும் பூதநாதனார் சோதித்துத் திறமையை ஆய்வதற்கு அழைத்தார்.  ஓர் அறையில் எல்லோரையும் காத்திருக்கச் சொல்லி  ஒவ்வொருவராக வரவைத்து   மூன்று நாழிகைக்கு மேல் பல கேள்விகள் கேட்டார். சோதனை முடிந்ததும் அவரவர் தங்காமல் அரசவையை விட்டு வெளியேறினர்.

எழினியிடம் பூதநாதனார் கேட்ட முதல் கேள்வி, "எழினியாரே,    அழிசி தடுமாறிவிட்ட ஈற்றடியையே உங்களுக்கும் அளிக்கிறேன்,  பொங்கிச் சுழன்ற புயல்  அதற்கு ஒரு வெண்பாவைச் சொல்லும் பார்ப்போம்."

அழிசியின் சோதனை முடிந்து வெளியே வரும்போது ஆதிமந்தி "எப்படிச் சோதித்தார் பூதநாதனார்?" என்று கேட்க   விடையேதுமளிக்காமல் அழிசி  விரைந்து வெளியே சென்றதில் எப்போதும் சிரித்தமுகமாக இருக்கும் ஆதிமந்தியார் முகம் கூம்பினார்.

ஆதிமந்தியின் வாட்டத்தை அறிந்த  நெடுமான் தன் சோதனை முடிந்ததும் போகிறவாக்கில் ஆதிமந்தியிடம் தன்னிடம் கொடுக்கப்பட்ட
 ஈற்றடி தித்தித் திருக்குமோ தீ   என்று  கூறி அவளை உற்சாகப்படுத்தி வெளியேறினார்.

பெருஞ்சாத்தனார் தம் சோதனை முடிந்து வெளியே வரும்போது மற்றவர்கள்  ஜோடி ஜோடியாக தமக்குள் பயிற்சியாகக் கேள்வி கேட்டுச் சோதனை  செய்துகொண்டிருப்பதைக் கண்டார்.

நெடுமான் தனக்களிக்கப்பட்ட ஈற்றடிக்கு விடையாக உரைத்த வெண்பாவைக் கேட்ட பூதநாதனார்,  "நெடுமானே அசத்திவீட்டீர்! எழினியை விட அழகான வெண்பாவை உரைத்துவிட்டீர், நான் நனி மகிழ்ந்தேன்" என்றார்.

*************

சரி.  உதிரிவெடி வாசகர்களுக்கு இதன் மூலம் நான் கேட்கும் புதிர்க்கேள்வி இதுதான்:
 பூதநாதனார் இந்த ஐவரையும் எந்த வரிசையில் சோதித்தார்?




Comments

Raji said…
This comment has been removed by the author.
Sundar said…
பெருஞ்சாத்தன், அழிசி, எழினி, நெடுமான், ஆதிமந்தி
Vanchinathan said…
முதல் விடையை அனுப்பிய சுந்தருக்கு நன்றி. இந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் இப்புதிருக்கு அவகாசம் கொடுக்கிறேன். அதன் பின் எவ்வாறு நீங்கள் விடையை அடைந்தீர்கள் என்பதற்கான இந்த வரிசைதான் சரி என்பதற்கான காரணத்தை ஹெர்க்யூல் பாய்ரோ போல் விளக்குங்கள்.
Ambika said…

1. பெருஞ்சாத்தன்
2. அழிசி
3. எழினி
4. நெடுமான்
5. ஆதிமந்தி
அழிசி
எழினி
ஆதிமந்தி
பெருஞ்சாத்தன்
நெடுமான்
Raji said…

நான் விடையை எழுதி பின்பு நீக்கி விட்டேன் சார்.,,,
Vanchinathan said…
விடையை அளிக்கலாம். ஆனால் உங்கள் விடை ஏன் சரியென்று நிரூபணம் பின்னர் அளிக்கவும்.
Partha said…
1. - மற்ற நால்வரை ஜோடி ஜோடியாகப் பார்த்த பெருஞ்சாத்தன்,
2. அழிசி தடுமாறிவிட்டாள் என்று எழினியிடம் சொன்னதால் அழிசிக்குப் பின் 3. எழினி,
எழினியை விட அழகான வெண்பாவை உரைத்துவிட்டீர் எனக்கேட்ட
4. நெடுமான்,
தன் சோதனை முடிந்ததும் ஆதிமந்தியை உற்சாகப்படுத்திய நெடுமானுக்குப் பின்
5. ஆதிமந்தி

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்