Skip to main content

விடை 3536

இன்றைய வெடி:
தட்டான் அணிந்திருப்பதும் பித்தளைக் கலவை கொண்டதுதான் (3) 

இதற்கான விடை:  தும்பி= அணிந்திருப்பதும் பித்தளைக்

இன்று விடையளித்தோர் பட்டியலை வெளியிட ராஜி ஹரிஹரன் இசைந்துள்ளார். அவருக்கு நன்றி.

****************

தும்பி என்பது ஒரு பூச்சியினம். ஹெலிகாப்டர் போன்ற தலை கொண்ட இப்பூச்சியின் கண்களில் ஆயிரக்கணக்கான லென்ஸ்கள் உள்ளன.  இதன் வாலில் சிறுவர்கள் நூலைக் கட்டிக் கொடூரமாக விளையாடுவார்கள்.
தேனீ போல் இது அவ்வளவு முறை சிறகடிக்காது.



(எகோர் காமெலேவ் எடுத்த புகைப்படம். இணையத்தில் இலவசமாகப் பயன்படுத்த அனுமதி  கொடுக்கப்பட்ட  படம்.)
 
இதன் பெருமையை உணர்ந்த இளையராஜா மலையாளத்தில் "தும்பி வா" என்ற பாடலை உருவாக்கியும், பின்னர் திருவாசகத்திலிருந்து தும்பியைப் போற்றும் பதிகத்திலிருந்தும் பாடலுக்கு இசையமைத்து மகிழ்ந்தார்.
அமெரிக்காவின் திறமை வாய்ந்த கணினி மென்பொருள் வல்லுநர்கள் யுனிக்ஸை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஓர் இயங்குதளத்துக்கு
இதன் பெயரைச் சூட்டி இப்பூச்சிக்கு மேலும் புகழ் சேர்த்தனர்.

பின் குறிப்பு: பள்ளிக் கூடத்தில் படித்து முடித்து பல  வருஷங்கள் ஆகிவிட்டது. பள்ளி மாணவன் போல் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான்!

Comments

Raji said…
"தும்பி" யை பிடித்தவர்கள் (24):
============================

1 6:04:41 ரவி சுப்ரமணியன்
2 6:05:30 Sandhya
3 6:05:43 KB
4 6:06:04 முத்துசுப்ரமண்யம்
5 6:07:31 நங்கநல்லூர் சித்தானந்தம்
6 6:07:48 உஷா
7 6:13:58 கோவிந்தராஜன்
8 6:17:46 ஆர்.நாராயணன்
9 6:32:06 வானதி
10 6:36:59 ராஜி ஹரிஹரன்
11 6:38:00 அம்பிகா
12 7:04:25 கு.கனகசபாபதி, மும்பை
13 7:29:38 பாலு மீ
14 7:34:11 siddhan
15 8:01:44 மாலதி
16 8:34:23 மாதவ்
17 9:09:47 சுந்தர் & மாயா வேதாந்தம்
18 9:11:58 எஸ் பி சுரேஷ்
19 9:15:14 மீ கண்ணன்
20 11:33:02 மு.க.இராகவன்.
21 11:56:03 புவனா சிவராமன்
22 17:15:02 ஆர். பத்மா
23 18:52:51 மடிப்பாக்கம் தயானந்தன்
24 20:14:01 பாலா
அநியாயத்திற்கு ஏமாற்றி விட்டீர்கள்!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்