Skip to main content

விடை 3510

இன்று காலை வெளியான வெடி:
 தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் கொண்ட முடிசூடா  மன்னன் (4)

இதற்கான விடை: பரதன் = தசரதன் - தச + ப


Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (25):

1) 6:03:05 திருமூர்த்தி
2) 6:11:06 K.R.Santhanam
3) 6:12:24 அம்பிகா
4) 6:14:11 ரவி சுப்ரமணியன்
5) 6:16:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:17:52 கி மூ சுரேஷ்
7) 6:18:34 கேசவன்
8) 6:19:51 ஆர்.நாராயணன்.
9) 6:25:10 ஸௌதாமினி
10) 6:45:38 ஏ.டி.வேதாந்தம்
11) 6:45:58 பத்மாசனி
12) 7:31:03 சங்கரசுப்பிரமணியன்
13) 7:37:01 பானுபாலு
14) 7:41:33 தி. பொ. இராமநாதன்
15) 7:49:56 மீனாக்ஷி
16) 8:06:26 ராஜா ரங்கராஜன்
17) 8:20:39 வி ன் கிருஷ்ணன்
18) 8:49:34 மு க பாரதி
19) 8:55:14 மீ சேஷாத்ரி
20) 9:19:38 வி ஜயா
21) 10:16:24 சதீஷ்பாலமுருகன்
22) 10:17:46 ருக்மணி கோபாலன்
23) 12:02:02 தேன்மொழி
24) 12:29:22 நங்கநல்லூர் சித்தானந்தம்
25) 19:58:51 கோவிந்தராஜன்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் கொண்ட முடிசூடா  மன்னன் (4) 

தந்தை = தசரதன்

இரு ஸ்வரங்கள் நீக்க வருவது
=தசரதன்- த, ச
= ரதன்

இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் கொண்ட
= ப + ரதன்

முடிசூடா மன்னன்
= பரதன்
*************************
ஏழு ஸ்வரங்கள்
ச, ரி, க, ம, ப, த, நி

தசரதன் என்பதில்
த, ச வுக்கு பதில் ஒரு ஸ்வரம் ப

*கொண்ட* = ப வை ரதன் உடன் சேர்க்க , வருவது பரதன்.

தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக *_ஒன்றைக் கொண்ட புதல்வன்_* *_முடிசூடா மன்னன்_ _பரதன்_*

எந்த ஸ்வரம் நீக்குவது /சேர்ப்பது என்பது solver to find out from the riddle, where it is implicitly indicated by the words _தந்தையின் ஸ்வரங்கள் கொண்ட முடிசூடா மன்னன்_ .

Obviously the father son relationship has been indiscreetly brought out in the riddle!
************************

அருமையான அமைப்பு. "தனது தந்தையின்" இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.
"தந்தையின்" என்றதால், தகப்பனின், அப்பாவின், என்றெல்லாம் நினைக்க நேர்ந்தது.
Raghavan MK said…
Another possible answer also there for this riddle.

In fact , morning l posted _பரதன்_ as my answer and prepared my peek into the riddle also!
However in the evening as an afterthought l revised my answer as
ரிப்பன்(பிரபு)
The justification for my revised answer is as below in my peek prepared for this also!!


A peek into today's riddle!
*************************
*viceroy*
noun
a *ruler* exercising authority in a colony on behalf of a sovereign.
***********************
ஸ்வரங்கள்

இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும்.

இயற்கை ஒலிகள் ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. இவையே சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ள சப்தசுரங்கள் ஆகும்.

ஏழு ஸ்வரங்கள்
ஸ ரி க ம ப த நி
*************************
_தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் கொண்ட முடிசூடா மன்னன் (4)_

_தந்தை_ = *தகப்பன்*

_இரு ஸ்வரங்களை (நீக்க வருவது_ )

= *தகப்பன்-தக*
= *ப்பன்*

_ஒன்றை (ஒரு ஸ்வரம்)_ = *ரி*

(தந்தையின் இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றைக் ) _கொண்ட__
= *ரி+ப்பன்*
*ரிப்பன்*

_முடிசூடா மன்னன்_
= *ரிப்பன்* (ரிப்பன் பிரபு)
*************************
*ரிப்பன் பிரபு* இங்கிலாந்துஅரசி விக்டோரியாவின் பிரதிநியாக இந்தியாவின் வைஸ்ராயாக நாட்டை ஆண்டார்(1880-1884)

*ரிப்பன் பிரபு* இந்தியாவில், சென்னையில் *_"ரிப்பன் எங்கள் அப்பன்"_* என்றழைக்கப்படுபவர்.

இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராய்க்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார்.
*************
1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின்னர், 1858 முதல் _இந்தியத் தலைமை ஆளுநர்_ பதவியின் பெயர் _இந்திய வைஸ்ராய்_ என மாற்றப்பட்டது.
இந்தியாவில் கம்பெனி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் மன்னரின் ஆணைப்படி, இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். வைஸ்ராயின் தலமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்த் தில்லிக்கு மாற்றப்பட்டது.
கானிங் பிரபு முதல் இந்திய வைஸ்ராய் ஆக 1858ல் தில்லியில் பதவி ஏற்றுக் கொண்டார்.

நவீன இந்திய வரலாற்றில் 1857 இல் நடைபெற்ற போர்தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஆங்கிலேயர்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை அழித்துவிட்டு _ஆங்கில முடியரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்தினர். முடியரசின் பிரதிநிதியாக இந்திய வைஸ்ராய் நியமிக்கப்பட்டார்_
💐🙏🏼💐
*************************
Raghavan MK said…
Without the title of king lord Ribbon was ruling lndia representing the queen.He is virtually the முடிசூடா மன்னன்.

For தந்தை to transform as தசரதன் There is no indicator. தந்தை can't be equated to தசரதன்.
தசரதன் is a proper noun
M k Bharathi said…
ஏழு ஸ்வரங்களில்
இனியஇசை பிறக்குது
இங்கு..,
மூன்று ஸ்வரங்களில்
அழகு புதிர் பிறந்ததே!
Raghavan MK said…

I feel the author should declare ரிப்பன் also as correct answer!
Ambika said…

A small correction--its Lord Ripon not Ribbon!
Partha said…
என் தவறான விடைக்கு (ரிப்பன்) விளக்கம்
தந்தை=தகப்பன்
இரு ஸ்வரங்களுக்கு பதிலாக ஒன்றை வைத்ததில் கிடைத்தார் ரிப்பன்
இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர் மன்னரின் பரதிநிதி என்றாலும் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் வைசிராய்
Vanchinathan said…
ரிப்பன் பிரபு விடையாக வந்தது நான் எதிர்பாராத சுவையான திருப்பம்.
ஆனால் முடி சூடிய அரசன் அரசின் இருக்கும் அதே நேரத்தில் இன்னொருவர் முடி சூடா மன்னர் என்று அழைக்கப்படுவதுண்டா?
பொதுவாக அவர் "கனி = பழம்" "ஒரு கனி = மா / பலா / வாழை /கொய்யா" என்று ஒரு மரபு பின்பற்றுவார். இந்த முறை அப்படி அவர் செய்யவில்லை. "ஒரு" இல்லாததால், தந்தை = தகப்பன், த, க சுரங்கள். ஒன்று = அ (தமிழ் எண் எழுத்துரு), அப்பன் என்று விடை கொடுத்தேன். அப்பன் = முடி சூடா மன்னன் கொஞ்சம் இழுபறி தான். அப்பன், இறைவன், ஆண்டவன், ன்னு ... ஆனா திருப்திகரமா இல்லை
Raghavan MK said…
In tamilno b or p didference
Raghavan MK said…

Queen for England
Ribbon for Indis
Raghavan MK said…


தகப்பன் is a synonym for தந்தை,whereas தசரதன் is not so !
தசரதன் is derived in the reverse process from the answer பரதன் and not the vice verse.
After guessing பரதன் as answer we try to fit in தந்தை with தசரதன்.
Hence it is felt ரிப்பன் fits in more logically satisfying the clues given in the riddle and it should also be declared as correct answer .
Hope the author will agree with this suggestion!
Chittanandam said…
ரிப்பனை நானும் யோசித்தேன்.எனது சிற்றறிவுக்கு ரிப்பன் பொருந்தவில்லை. அவர் முடிசூடா மன்னரல்லர். அரசரின் glorified ஏஜண்ட். அவ்வளவுதான். வாரன் ஹேஸ்டிங்ஸுக்கு ஏற்பட்ட கதி தெரியும்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்