Skip to main content

விடை 3507

இன்று காலை வெளியான வெடி:
ஒரு மாவட்டத்தில் யாவரும் எதிர்க்க பாதி அடங்கிய கசனின் காதலி (4)

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் பக்கம் இருந்த சுக்கிராச்சாரியார் தன்னுடைய மருந்து ஒன்றினால் இறந்தவர்களையெல்லாம் உயிர்ப்பித்து வந்தார். தேவர்கள் பக்கமிருந்த பிரகஸ்பதி தனக்குத் தெரியவில்லையே என்றுரு நினைத்துத் தன் மகன் கசனை அதைக் கற்று வர சுக்கிராச்சாரியாருக்கு மாணவானக் இருந்து வா என்று அனுப்பினார் அவ்வாறு சுமார் 500 வருடங்கள் மாணவனாயிருந்த கசனை சுக்கிராசாரியார் மகள் தேவயானி காதலித்தாள். ஆனால் அவள் மணந்தது என்னவோ யயாதியை. அந்த கதை நான் மேலும் சொல்லவில்லை. இன்னொரு புதிருக்கு உதவுமல்லவா!

இன்றைய புதிரின் விடை, தேவயானி = தேனி + யாவ (ரும்)
இன்றைய புதிர் 50க்கும் மேற்பட்டோர் விடையளித்து ,எளிதாக அமைந்துவிட்டது.  நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,  நீங்கள் எல்லோரும் வீட்டில் உட்கார்ந்து நீண்ட நேரம் யோசிக்கும்படியாக  ஒரு புதிரை வெளியிடுகிறேன்.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (51):

1) 6:01:06 லட்சுமி சங்கர்
2) 6:02:49 இரா.செகு
3) 6:03:19 ரவி சுப்ரமணியன்
4) 6:04:37 ரங்கராஜன் யமுனாச்சாரி
5) 6:04:50 அம்பிகா
6) 6:05:58 ரமணி பாலகிருஷ்ணன்
7) 6:06:36 முத்துசுப்ரமண்யம்
8) 6:06:40 வானதி
9) 6:07:18 எஸ்.பார்த்தசாரதி
10) 6:07:51 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:07:59 ஹரி பாலகிருஷ்ணன்
12) 6:08:06 கேசவன்
13) 6:08:18 எஸ் பி சுரேஷ்
14) 6:11:09 சுந்தர் வேதாந்தம்
15) 6:12:37 ஆர். பத்மா
16) 6:13:32 உஷா
17) 6:14:50 KB
18) 6:15:28 ராமராவ்
19) 6:15:48 ருக்மணி கோபாலன்
20) 6:18:21 மடிப்பாக்கம் தயானந்தன்
21) 6:18:24 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
22) 6:18:26 நாதன் நா தோ
23) 6:19:41 மு.க.இராகவன்.
24) 6:21:32 சதீஷ்பாலமுருகன்
25) 6:22:13 ஶ்ரீவிநா
26) 6:26:08 லதா
27) 6:27:23 பாலு மீ
28) 6:33:17 பிரசாத் வேணுகோபால்
29) 6:46:27 ராஜி பக்தா
30) 6:51:20 ரவி சுந்தரம்
31) 6:56:25 மீ கண்ணன்
32) 7:06:23 மீனாக்ஷி
33) 7:27:45 கலாராணி
34) 7:41:06 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
35) 7:42:30 Suba Srinivasan
36) 7:44:48 சங்கரசுப்பிரமணியன்
37) 7:59:40 வி ஜயா
38) 8:16:13 மாலதி
39) 8:16:50 ராதா தேசிகன்
40) 8:28:00 மீனாக்ஷி கணபதி
41) 8:48:09 ஆர்.நாராயணன்.
42) 8:59:54 ராஜா ரங்கராஜன்
43) 9:03:32 கோவிந்தராஜன்
44) 9:14:42 மு க பாரதி
45) 10:50:13 பாலா
46) 10:51:04 ஏ.டி.வேதாந்தம்
47) 10:51:38 பத்மாசனி
48) 11:29:18 தேன்மொழி
49) 12:30:28 ராஜி ஹரிஹரன்
50) 17:15:13 ஶ்ரீதரன்
51) 19:56:18 வி ன் கிருஷ்ணன்
**********************
Raghavan MK said…


A peek into today's Tamil riddle!
************************
*தேனி* மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் வட்டத்தில் _வைகைஅணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி_ , உத்தமபாளையம் வட்டத்தில் _சுருளி நீர்வீழ்ச்சி_ ஆகிய முக்கிய சுற்றுலாத் தளங்கள் ஆகும். தேனி வட்டம், வீரபாண்டி கிராமம் _கௌமாரியம்மன் கோவில்,_ உத்தமபாளையம் வட்டம் குச்சனூர் _சனீஸ்வர பகவான் திருக்கோவில்_ ஆகியவை இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களாகும்.
🙏🏼
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*கசன்* தேவர்களின் 
குருவான பிரகஸ்பதியின் மகன்.அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டு வர பிரகஸ்பதியால்
அனுப்பப்படுகிறான்.

சுக்கிராச்சாரியாரின் 
குருகுலத்தில் கசன் சேர்ந்து குருகுலக் கல்வியை தொடங்கினான். அந்நிலையில் சுக்கிராச்சாரியின் மகளான  *தேவயானி*
கசன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள்!
**********************
_ஒரு மாவட்டத்தில் யாவரும் எதிர்க்க பாதி அடங்கிய கசனின் காதலி (4)_

_ஒரு மாவட்டத்தில்_
= *தேனி* யில்

_யாவரும் எதிர்க்க_
= _யாவரும்_ <------> _ம்ருவயா_

_பாதி_
= _(ம்ரு)_ *வயா*

_ஒரு மாவட்டத்தில் அடங்கிய_
= *தேனி* _யில்_ *வயா*
= *தே+வயா+னி*
*தேவயானி*
_கசனின் காதலி_
= *தேவயானி*
**********************
கசனின் குருகுலக் கல்வி முடியும் நிலையில் தேவயானி கசனை அனுகி தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினாள். தேவயானி தனது குருவின் மகள் என்பதலாலும் மேலும் தான் குருவின் வயிற்றிலிருந்து மீண்டும் வெளிப்பட்டதாலும் தேவயானி தனக்கு சகோதரிமுறை ஆவதால் கசன் தேவயானியை மணக்க மறுத்தான். 

இதனால் ஆத்திரம் கொண்ட தேவயானி, தனது தந்தையான சுக்கிராச்சாரியிடம் கற்ற சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயன்படுத்த முடியாதபடி சாபமிட்டாள். அதற்கு கசன், நான் பயன்படுத்தா விட்டாலும் மற்ற தேவர்களுக்கு இம்மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறினான். பதிலுக்கு கசன், தேவயானியை நோக்கி உன்னை உன் குலத்தவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனச் சாபமிட்டான். பின் சுக்கிராச்சாரியாரிடம் விடைபெற்று சஞ்சீவினி மந்திரத்துடன் தேவலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை அடைந்தான்.

பின்னாளில் தேவயானி சந்திரகுல மன்னன் 
யயாதியை 
மணக்கிறாள்.

💐🙏🏼💐
Raghavan MK said…



*_கசனின் காதலி_*

_புதிர் கட்டமைப்பு வெகு அருமையாக அமைந்துள்ளது_ .
_கசனின் காதலியை_ விடையாக அமைத்துள்ளார் ஆசிரியர்.
இங்குதான், சிறியதொரு சந்தேகம் எழுகிறது!

_தேவயானி கசனின் காதலியா?_
அல்லது
_தேவயானியின் காதலன் கசனா?_

தேவயானி கசன் மீது கொண்டிருந்தது *ஒருதலைக்காதல்!*
கசன் தேவயானியின் காதலை ஏற்கவேயில்லை.

தேவயானி என்ற விடைக்காக புதிரை அமைத்திருந்தாலும், கசனின் காதலி தேவயானி என்பதில் ஐயம் ஏற்படுகிறது.

1.கசனின் காதலி தேவயானி எனக்கூறுவதுபொருந்துமா?

2.அல்லது புராணங்களில் கசன் தேவயானியைக் காதலித்ததற்கு வேறேதும் சான்று உள்ளதா?

_புதிராசியர் சற்று விளக்கமளித்தால் நன்று!_
Vanchinathan said…
ஆமாம். கசன் தேவயானியின் மேல் நாட்டமில்லதவனாகவே இருந்தான். சுக்கிராச்சாரியாரிடம் மந்திரத்தைக் கற்க ஒழுக்கமான மாணவ்னாக இருப்பதே அவனது நோக்கமாயிருந்தது. ஆனால் காதலி என்றால் ஒரு புறமான பொருள்தானா? காதலி என்றால் a woman who loves (a man) என்ற பொருளும் உண்டே!
Raghavan MK said…
[12/1, 22:31] Dhayanandan: புதிரில் பொருள் பிழையுண்டு.. Actually, கசனின் காதலியல்ல அவள்! குருவின் மகளென்று கசனால் ஒதுக்கப்பட்டவள்..
[12/1, 22:36] ‪+1 (813) 766-8819‬: கசன் தான் அவளது காதலன். கசன் அவளைக் காதலிக்க வில்லை.
[12/1, 22:38] Dhayanandan: Yes.. ￰கசன் தேவயானியை தங்கை என பாவிக்க நினைத்தான்.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்