இன்று காலை வெளியான வெடி:
ஒரு ராகம் கேட்டவுடன் தாளத்துடன் ரசிக்கத் தொடங்கியவர்கள் காலம் முடிந்தது (4)
அதற்கான விடை: கேதாரம் = ஒரு ராகத்தின் பெயர்.
கேட்டவுடன், தாளத்துடன், ரசிக்க இச்சொற்களின் தொடக்க எழுத்துகளும்
"காலம்" என்பதன் முடிவான எழுத்தும் கொண்டமைக்கப்பட்டது.
மற்றபடி இக்காலத்து மக்களெல்லாம் ராகங்களை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று நான் சொல்ல வந்ததாக நினைக்க வேண்டாம்.
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
_பித்தாக்கி எம்மை மகிழ்வுறச் செய்யும் - உமக்கு_
_சத்தான வளங்கள் பல சேர்ந்திட_
_வித்தான இறையருள் கிட்டிடவே_
பிறந்த நாள் வாழ்த்துகளுடன்
வேண்டிடும் அன்பன்
மு.க.இராகவன்.
அதுபோல பிவிஆர் "சென்ட்ரல்" ன்னு ஒரு தொடர்கதை எழுதினார்.
அந்த கதை நாயகன் பெயர் கேதாரம். எப்பவோ படிச்சது. இன்னும் பிக்பாகெட் மணி, கார்ட் ரொசாரியோ, குண்டு பொண்ணு அபீதம் எல்லாம் ஞாபகம் இருக்கு.
கேதாரம் என்று பெயர் இருக்கிறதா? அவனுடைய மனைவி K.தாரம் என்று கையெழுத்திடுவாளா?