விடை 3902
இன்று காலை வெளியான வெடி:
போர் வர்ணனையாளன் கடைசியாக வராததால் ஒரு ஸ்வரத்துடன் சுற்றி வா (4)
அதற்கான விடை: சஞ்சரி = சஞ்சய்/யா - யா + ரி
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சஞ்சய உவாச்ச ன்னு தான் வரும். சஞ்சய/சஞ்சய்/சஞ்சயா எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்க மறு உருவங்கள் ன்னு சமாதனம் சொல்லி சஞ்சரி போட்டேன்
மகாபாரத்தில நிறைய பெயர்கள் வழக்கில் இல்லை. அர்ஜுனன், கிருஷ்ணன், அங்கங்க பீமா ராவ், பீம் சிங் உண்டு. சில கிராமங்களில் பாஞ்சாலி ன்னு பேர் வைக்கிறார்கள்.
ஆனால் சகாதேவன், சத்யவதி, ப்ரீதா (குந்தியின் இயற் பெயர்) இன்னும் வழக்கில் உள்ளது. சஞ்சய் மிகவும் பிரபலமாக அர்ஜுனனுக்கு நிகராக இருக்கிறது. சில பெயர்களுக்கு விளக்கம் தெரிகிறது, பீஷ்மனுக்கு வம்ச விருத்தி இல்லை, அபிமன்யு அல்பாயுசு, தமயந்தி நளன் கஷ்டப்பட்டவர்கள், மற்ற பெயர்கள் இதிகாசத்தோடு நின்றுவிட்டது ஏன் ?