இன்று காலை வெளியான வெடி:
நீண்ட தூர சிக்கலோடு திட்டி உணவை ஒதுக்கிவிடும் சமயம் (4)
அதற்கான விடை: ஏகாதசி = ஏசி + காத
ஏசி = திட்டி
காத (ம்) = நீண்ட தூர(ம்)
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
நீண்ட தூர சிக்கலோடு திட்டி உணவை ஒதுக்கிவிடும் சமயம் (4)
திட்டி = ஏசி
நீண்ட தூர( ம்) = காத(ம்)
சிக்கலோடு = anagram indicator for ஏசி+காத
= ஏகாதசி
=உணவை ஒதுக்கிவிடும் சமயம்
***********************
ஏகாதசி என்பது சந்திரனின்
இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.
அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.