நேற்றைய வெடி
எலியிடமோ ஆசை குறைந்தால் தலைப்பிரசவத்திற்குத் தயாராகிறவள் பராக் (4)
அதற்கான விடை: வளையோசை = வளையோ + சை
வளையோ = எலியிடமோ = எலியினது இடமோ (ஆறாம் வேற்றுமைத் தொகையாக);
சை = ஆசை குறைந்தால்
தலைப்பிரசவத்துக்கு முன் வளைகாப்பு முடிந்தபின் கலகலவென பெண் வருவதை அறிவிக்கும் ஓசை.
மூன்று நாட்கள் முன்பு லதா மங்கேஷ்கர், எஸ்பிபி பாடிய பாட்டைக் கேட்டபோதே இந்தவார்த்தையை அமுக்கிப் பிடித்துக் கொண்டேன், எதாவது புதிருக்குப் பிரயோஜனமாகுமென்று.
Comments