Skip to main content

திரிவெடி 48 விடை

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
வெள்ளி, நீலம், நெல், மரவள்ளி, கருணை
நான் எண்ணிப்பார்க்காத ஆனால் சுவாரசியமான விடைகள் வந்துள்ளன.
கருணை என்பது மட்டும் மனதின் உணர்ச்சி மற்றவை பொருள்கள் என்பது ஓரளவுதான் சரி, ஏனென்றால் மொட்டையாக பொருள்கள் என்பது நெருக்கமான தொடர்பைக் காட்டவில்லை.
இதே நான்கு சொற்களை இயற்கை வளங்கள் என்று பிணைக்கலாம் அல்லது தவரங்களைச் சார்ந்தவை என்று வெள்ளியை  நீக்கி மற்றவற்றைக் கூறலாம்.
மண்ணுக்குள்ளா அல்லது மேலா என்ற வகையில் நெல் தனித்திருப்பது என்கிறார்கள்.

என்னுடைய விளக்கம் இதோ:
தனித்த சொல் மரவள்ளி. மற்றவை  பற்றி: வெள்ளி (சுக்கிரன் என்றும் அழைக்கப்படும்) நவகிரகங்களில் ஒன்று.
நீலம் (sapphire), நவரத்தினங்களில் ஒன்று. நெல் நவதானியங்களில் ஒன்றாகவும், கருணை  நவரசங்களில் ஒரு ரசம் என்றும் ஒன்பது ஒன்பதாக வகைப்படுத்தப்படுபவையில் ஒன்றாக உள்ளன.

மீண்டும் அடுத்த சனிக்கிழமை வேறொரு திரிவெடியில் பார்க்கலாம். புதிதாக வந்துள்ளவர்கள் இன்று உதிரிவெடியையும், க்ரிப்டான் என்ற ஆங்கிலப் புதிரையும் எட்டிப் பாருங்கள். மேலே மூன்றுபட்டையை அழுத்தி பழைய புதிர்களைப் பாருங்கள், ஆனால் விடைகளை ஏற்க முடியாது (விடைகள் வெளியாகிவிட்டதால்).


 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.   



Comments

GUNA said…
மரவள்ளி வார்த்தை மரவள்ளி என்னும்
ஒருகிழங்காம்  என்றே உரைப்போர்-கருணை
அதுபோல் குறிக்கும் கருணைக் கிழங்கையென்றே
எதனால்  மறந்தனர் இங்கு.
 
GUNA said…
நீலம், கருணை, வெள்ளி என்ற பெயர்களில் அரிசிகள் உண்டா?
விக்கிபீடியா சொல்வது
Neelam is India's premium basmati rice and has become an international favorite.
Neelam Basmati Rice is well-known for its fragrance and length of grains, and
purity is ensured in each grain.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

Silver Basmati Rice is a high-quality variety of Basmati rice known for its long grains, delicate aroma, and excellent cooking characteristics. It is often chosen for its purity  and superior quality.
--------------------------------------------------------------------------------------------------
கருப்பு கவுனி அரிசி, கருணை அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
இது, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது, நார்ச்சத்து நிறைந்தது, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
Vanchinathan said…
மரவள்ளிக்கு பதிலாக நாய்க்குட்டி, நாற்காலி, நாணல், நாரதர் என்று போட்டிருந்தாலும் மீதமுள்ள நான்கும் சேர்ந்து இது தனியாக இருக்கும். மரவள்ளி ஏன்?
GUNA said…
கருணை  குறிப்பது கொள்ளும் உணர்ச்சி,
பொருளாம் பிறவென்றே போட்ட - ஒருகருத்தைக்
கண்டு கருணைக் கிழங்கும் பொருளெனக்
கொண்டிடச் சொல்லுவதென் கூற்று.
Vanchinathan said…
புதிர் என்பதில் குழப்பித் திசை திருப்பும் உத்திகள் இருக்கும். புதிர்களை அமைக்கவும் தீர்க்கவும் விஷய ஞானமும் சற்று குயுக்தியும் தேவை. இதில் ஒன்று இல்லாமற்போனால் சுவையான புதிராக இருக்காது. இங்கு நான் அளிப்பது அறிவைச் சோதிக்கும் கேள்வி பதில் போட்டி இல்லை.
GUNA said…
ஏன்மர வள்ளி எனுமொரு கேள்விக்குத்
தான்பதில் கேட்டதால் சொல்கிறேன் -- நானிதை
அச்சொல் பொருளென்றால் ஆகும் பொருளென
இச்சொல் கருணையும் இங்கு.
GUNA said…
புதிரில் குயுக்தி புகுத்தும் செயலில்
  எதுவும் தவறில்லை ஆனால் -புதிரின்
  விடையில்  தெளிவுதான் முக்கியம் என்பேன்
  உடன்படும் மாந்தர் உளர்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்