Skip to main content

திரிவெடி 50 விடைகள்

 நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்.

சுண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய்

 இப்புதிருக்குப் பொருத்தமாய் பல விடைகள், வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கப்படவேண்டியவை என்று தெரிந்து கொண்டேன்

(1) வாழைக்காய் மட்டும் பழமாகவும் உண்ணப்படுவது, மற்றவை காய்களாகவே பயன்படும் என்று விடை கூறிய மீ கண்ணன், மீனாக்ஷி, அனிதா காந்தி, பானுமதி இவர்களுக்குப் பாராட்டுகள்.

(2) சுண்டைக்காய் மட்டும் அப்படியே முழுதாகச் சமைக்கப்படுவது, மற்றவையெல்லாம் நறுக்கிய துண்டுகளாகவே சமைக்கப்படும் என்ற‌
ராம்கி கிருஷ்ணன் அளித்த விடை  ஏற்கத்தக்கது. பாராட்டுகள்.

(3) அமாவாசையன்று வாழைக்காய் மட்டும் சமைக்கலாம் என்ற மரபை(பௌர்ணமியன்று!) சுட்டிகாட்டியிருக்கிறார் சொக்கலிங்கம். ஏற்றுக்கொள்ளலாம்.
(4) பத்மா, ஜோசப் அமிர்தராஜ் இருவரும் வாழைக்காய் மட்டும் தோலை நீக்கிச் சமைக்கப்படவேண்டிய காய் மற்றவை தோலோடு சமைக்கப்படுபவை என்ற பொருத்தமான விடையளித்திருக்கிறார்கள். பாராட்டுகள் (வாஞ்சிநாதனின் விடையும் இதுவே. தினம் காலையில் வீட்டில் சமையலுக்கு உதவுகிறேன் என்று கையில் கத்தியுடன் கிளம்பும்போது இன்று  பூசனிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு இதையெல்லாம் திட்டிக் கொண்டே, வெண்டைக்காயை எவ்வளவு சமர்த்தான காய் என்று பாராட்டி நினைக்கும்போது உருவான புதிர் என்று புதிர் தோன்றும் காரண ஆய்வாளர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்).


(5)  வடிவத்தால் சுண்டை மட்டும் உருண்டையாய்த் தனித்து நிற்கிறது என்று சொக்கலிங்கமும், ஜோசப் அமிர்தராஜும், ஜ்யாமெட்ரி விளக்கத்துடன் இரண்டாவது விடையை அளித்ததற்குப் பாராட்டுகள்.

(6) அம்பிகாவும், ஜோசப் அமிர்தராஜும் வெண்டைக்காய்,  தனியாய்க் காய்ப்பதால் தனித்திருக்கிறது என்கிறார்கள், மற்ற காய்களெல்லாம் கொத்தாகத் தோன்றுபவை என்று தாவரவியல் காரணத்தை அளித்திருக்கின்றனர். ஏற்கத்தக்கது, பாராட்டுகள்.

இப்புதிரை உருவாக்கியபோது இத்தனை விடைகள் சாத்தியமென்று நான் நினைக்கவில்லை. எப்படியெல்லாம் யோசிக்கலாம் என்று  இன்று வந்த உங்களது விடைகளிலிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். (எச்சரிக்கை: இப்படி உங்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை இன்னொருநாள் புதிராக மீண்டும் உங்கள் மீதே வீசுவேன் என்று மிராண்டா அடிப்படையில் தெரிவித்துக் கொள்கிறேன்).


இந்த 50வது திரிவெடியை வண்ணமயமாக்கியதற்கு நன்றி.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.  

 

Comments

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்