நேற்றைய வெடி
கிளி உண்ணத் தயாராகும் முன்பு சமைப்பது சிறிய கொங்குநகருக்காக எனலாம் (5)
கோவைப்பழம், கிளி உண்பது.
அத்திக்காய் யோசித்தவர்கள், தயாராகும் முன்பு அப்பழம், கோவைக்காய் என்று கண்டுபிடித்திருப்பீர்கள்.
கொங்குநகர் = கோயம்புத்தூர்
அது சிறியதாகும்போது = கோவை
எதற்காய் அதை கோவைக்காய் என்று சொன்னேன் என்பதை விளக்காய் என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள். அது ஒன்றும் புரியாத விளாங்காயல்ல.
.நேற்றைய திரிவெடிக்கு பலவிதமாய் யோசித்தவர்களின் புத்திசாலித்தனமான விடைகளை மனதாரப் பாராட்டிக் கருத்துரை எழுத நேரமில்லாதவர்கள் சார்பாக இன்னொருமுறை இங்கே நன்றி கூறுகிறேன்.
இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments