Skip to main content

வெண்ணிக்குயத்தியார் பாடிய வாகை (அல்லது) விடை 3270

வெண்ணிக்குயத்தியார் பாடிய வாகை (அல்லது) விடை 3270

கவிஞர்கள்  அரசனைப் புகழ்ந்து பாடி ஏதேனும் பரிசு பெற்றுச் செல்வது வழக்கம். அதுவும் போரில் வெற்றி பெற்றுத் திரும்பி வந்த மன்னனை வாகைத்திணையில் பாராட்டிப் பாடுவது வழக்கம். கரிகாலன், சேரன் பெருஞ்சேரலாதனை வென்று வந்த போது வெண்ணிக் குயத்தி(யார்) பாடுகிறார்:
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய்.

அதோடு நிற்காமல், அப்படியே தோற்ற‌ அரசனையும் சொல்கிறார்:
   நின்னினும் நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந்தோனே.
(புறநானூறு 66)

சோழன் வீசிய வேல் சேரன் மார்பில் புகுந்து முதுகு வழியாய் வெளிவந்து முதுகிலும் காயமுற்றதை முதுகைக் காட்டி ஓடிய போது பெற்ற புண் என்று உலகோர் இழிவாக நினைக்கக் கூடாது என்று அவன் வடக்கிருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டான். அதனால் தோற்ற அவ்வரசன் உன்னைவிட நல்லவன் என்று சொல்கிறார்.

இதில் பல விஷயங்கள் இடிக்கின்றன. அப்படி வேல் பாய்ந்து மறுபுறம் வந்தபின் உடனே சாகவில்லையா? பல நாள் வடக்கிருந்துதான் சாகவேண்டுமா?

இவ்வளவு தைரியமாக ஒரு பெண், அரசரிடம் இப்படிப் பாட முடியுமா? இந்த தைரியத்தை நான் சந்தேகிக்க இன்னொரு காரணம்:
 புறநானூற்றில் இன்னொரு பாடலில் தன் தலைவன் மல்யுத்தத்தில் வென்றதைப் பார்த்ததாகத்  தலைவி இப்படிக் கூறுகிறாள் (நக்கண்ணையாரின் பாடல்)

அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல்,
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,

யான்கண் டனன் அவன் ஆடா குதலே. (புறநானூறு 85)

இதற்கு உ.வே.சா. அல்லது பழைய உரையாசிரியர் கூறுவது: "முழாவரைப் போந்தை பொருந்தி நின்று" (பனைமரத்தில் சாய்ந்து நின்று அவ்வெற்றியைப் பார்த்தாள்.) "எதையாவது ஒன்றைச் சார்ந்து நிற்பது குலமகளிர் இயல்பு"! மரத்தின் பின், தூணின் பின், கதவின் பின் கிராமத்துப் பெண்கள் அக்காலத்திலும் நின்று கொண்டிருப்பது இயல்பு என்றிருக்கையில் (நக்கண்ணையார் என்னும் பெண்பாற்புலவர் கூறுவது) இப்படி வெண்ணிக் குயத்தியார் " ஒன்னை விட இந்த ஒலகத்தில் ஒசந்தவன் சேரலாதன்" என்று சொல்வது உண்மையாக நடந்ததா அல்லது தனியாகப் புலவர் கூட்டத்தில் பேசிக் கொண்டதா? நம் தமிழறிஞர்கள் நடுநிலையாக இதை ஆராய்ந்து கூறவேண்டும்!

வெண்ணிக்குயத்தியாரின் இப்பாடலில் முதலிரு வரிகளில் இன்னமும் வியக்கத் தக்க செய்தி இருக்கிறது.

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக"

 கடலில் (முந்நீர்) கப்பலைச் செலுத்த  காற்றைத் திறம்படக் கையாண்ட  மன்னர்களின் வழித் தோன்றலே (மருக) என்று கரிகாலனைப் பாராட்டிவிட்டுதான் வெண்ணிக் குயத்தியார் சேரனை வென்ற விஷயத்திற்கு வருகிறார். இதிலிருந்து கப்பலோட்ட காற்றைப்புரிந்து ஒட்ட வேண்டும் என்பதும் அத்திறனைக் கரிகாலனுக்கும் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள் என்றும் ஊகிக்கலாம்.


ஹெரிடேஜ் தமிழ் அகாடமியின் இக்காணொளி  திறமையான மொழி பெயர்ப்புடனும் அழகான ராகத்துடனும் (தர்பாரி கானடா?) ர‌சிக்கும்படி இருக்கிறது.


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (56):

* விளக்கம் அளிக்காதவர்கள்
*** சரியான‌ விளக்கம் அளித்தவர்கள்

1) 6:02:57 ராமராவ் ***
2) 6:03:01 முத்துசுப்ரமண்யம்***
3) 6:05:53 லக்ஷ்மி ஷங்கர்***
4) 6:07:09 ரவி சுப்ரமணியன் ***
5) 6:09:32 பானுமதி *
6) 6:10:26 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்***
7) 6:10:39 எஸ் பி சுரேஷ்***
8) 6:10:42 இரா.செகு***
9) 6:10:48 எஸ்.பார்த்தசாரதி ***
10) 6:11:04 இ சீ சந்திரமௌலி***
11) 6:11:35 நாதன் நா தோ***
12) 6:13:12 கி. பாலசுப்ரமணியன் ***
13) 6:14:04 ஆர் .பத்மா ***
14) 6:14:29 ரா. ரவிஷங்கர்.***
15) 6:15:20 சங்கரசுப்பிரமணியன்***
16) 6:15:32 வீ.ஆர். பாலகிருஷ்ணன்***
17) 6:16:31 ரங்கராஜன் யமுனாச்சாரி***
18) 6:21:59 சித்தன்***
19) 6:22:51 மு.க.இராகவன்.***
20) 6:25:09 லதா***
21) 6:25:10 ஶ்ரீவிநா***
22) 6:27:33 சுந்தர் வேதாந்தம்***
23) 6:28:17 ரவி சுந்தரம் ***
24) 6:29:26 சாந்திநாராயணன்***
25) 6:36:23 மீனாக்ஷி கணபதி***
26) 6:40:47 ரமணி பாலகிருஷ்ணன் ***
27) 6:41:25 தி பாெ இராமநாதன்***
28) 6:44:24 கி.பாலசுப்ரமணியன்***
29) 6:53:18 ராஜி ஹரிஹரன்***
30) 6:55:02 வித்யா ஹரி***
31) 6:56:58 கல்பனா***
32) 6:58:15 ராதா தேசிகன்***
33) 7:05:51 வானதி***
34) 7:05:54 பாலா***
35) 7:16:30 கே.ஆர்.சந்தானம் ***
36) 7:46:36 ஆர்.நாராயணன்.***
37) 7:48:47 கேசவன்***
38) 7:56:46 நங்கநல்லூர் சித்தானந்தம்***
39) 8:26:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***
40) 8:27:54 சுபா ஸ்ரீநிவாசன்***
41) 9:17:49 ஆர்.நாராயணன்.***
42) 9:52:29 லட்சுமி மீனாட்சி ***
43) 9:54:53 கு.கனகசபாபதி , மும்பை***
44) 10:06:14 ருக்மணி கோபாலன்***
45) 10:08:34 மீ பாலு***
46) 10:23:12 மீனாக்ஷி***
47) 10:30:20 சதீஷ்பாலமுருகன்***
48) 10:54:07 செந்தில் சௌரிராஜன்***
49) 11:40:56 மு க பாரதி***
50) 12:00:32 அம்பிகா***
51) 12:32:48 விஜயா ரவிஷங்கர்***
52) 13:06:30 மைத்ரேயி சிவகுமார்***
53) 14:14:12 ஸௌதாமினி *
54) 17:17:16 ஏ.டி.வேதாந்தம்*
55) 17:17:47 பத்மாசனி***
56) 17:37:50 மரு.ப.சந்திரமௌலி***

************************************************
Muthu said…
<< மரத்தின் பின், தூணின் பின், கதவின் பின் கிராமத்துப் பெண்கள் அக்காலத்திலும் நின்று கொண்டிருப்பது இயல்பு என்றிருக்கையில் (நக்கண்ணையார் என்னும் பெண்பாற்புலவர் கூறுவது) இப்படி வெண்ணிக் குயத்தியார் " ஒன்னை விட இந்த ஒலகத்தில் ஒசந்தவன் சேரலாதன்" என்று சொல்வது உண்மையாக நடந்ததா>> குயத்தியார் பாடியதைச் சொல்லி இருக்கிறார்கள் - அதன் பின் அவர் என்ன ஆனார் என்று ஏதேனும் தகவல் உண்டா? அவரும் ஒரு வேளை வடக்கிருக்க வேண்டி வந்ததோ என்னவோ!
Muthu said…
This comment has been removed by the author.
Muthu said…
திருத்திய பதிப்பு:

”இண்டெர்மீடியெட்டில்” கம்பராமாயணம் - மனப்பாடப் பகுதி இப்படி
உதிரிவெடியில் வெற்றி பெற வழி செய்யும் என்று நினைத்ததில்லை!

கங்கை இரு கரையுடையான்; கணக்கிறந்த நாவாயான்;
உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவன்; உயர்தோளான்;
வெங்கரியின் ஏறனையான்; விற்பிடித்த வேலையினான்;
கொங்கலரும் நறுந்தண்டார்க் குகன்என்னும் குறியுடையான்

கம்ப ராமாயணம் - குகப் படலம் 25
https://ta.wikisource.org/wiki/பக்கம்:அழியா_அழகு.pdf/200
(இங்கு ”ந”எல்லாம் “க”வாகிவிட்டன!)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்