Skip to main content

விடை 3268

இன்று (05/04/2018) காலை வெளியான வெடி
ரஷ்யத் தலைவரை அடியில் விழ வைத்த நாடு (4)
இதற்கான  விடை: பாரதம் = ர +  பாதம்

டிரம்ப் ஆளும் அமெரிக்காவாலோ,  நச்சுப் பொருளை சாலிஸ்பரியில் வீசிக் கொலை முயற்சி செய்தார் என்று கூறிய இங்கிலாந்தாலோ   விளாதிமிர் புடினை அடி பணிய வைக்க முடியவில்லை. என்னவோ புதிரில் அவரைத் தந்திரமாகக் கவிழ்த்திடலாம்.

இதைத்தான் திருவள்ளுவர் தீர்க்கதரிசனமாக அன்றே கூறினார்:

எதிரி ஒருவன் எவர்க்கும் வணங்கான்
புதிரில்  புரட்டல் தலை  (அதிகாரம்: 134: பகையடக்கல், குறள் எண்: 1334)

விளாசி அடிப்பினும் வீழாதாம் தென்னை
விழாத்திமிர் வேர்வெட்ட போம் (அதிகாரம்: 134: பகையடக்கல், குறள் எண்: 1339 )

பரிமேலழகர்  உரை: சாட்டையால் பலமுறை விளாசி அடித்தாலும் தென்னை மரம் விழாமல் திமிரோடு நிற்கும். ஆனால் வேரினை வெட்டினால் சாய்ந்துவிடும்.

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (33):

1) 6:01:53 ராமராவ்
2) 6:02:17 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:09 கி. பாலசுப்ரமணியன்
4) 6:06:09 ரா. ரவிஷங்கர்..
5) 6:07:25 ராஜா ரங்கராஜன்
6) 6:07:58 விஜயா ரவிஷங்கர்
7) 6:07:59 மீனாக்ஷி கணபதி
8) 6:11:49 ஶ்ரீவிநா
9) 6:14:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:15:32 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:19:50 கேசவன்
12) 6:20:06 ரவி சுப்ரமணியன்
13) 6:25:16 தி பாெ இராமநாதன்
14) 6:28:18 முத்துசுப்ரமண்யம்
15) 6:30:16 ரவி சுந்தரம்
16) 6:36:25 நாதன் நா தோ
17) 6:44:27 சுந்தர் வேதாந்தம்
18) 6:55:06 ரமணி பாலகிருஷ்ணன்
19) 6:56:01 எஸ் பி சுரேஷ்
20) 7:10:45 சித்தன்
21) 7:18:14 வி ன் கிருஷ்ணன்
22) 7:22:36 அம்பிகா
23) 7:25:40 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
24) 7:43:29 மு க பாரதி
25) 9:33:53 சுபா ஸ்ரீநிவாசன்
26) 9:43:39 ரங்கராஜன் யமுனாச்சாரி
27) 10:19:11 மீ பாலு
28) 11:20:04 மீனாக்ஷி
29) 14:40:57 மைத்ரேயி சிவகுமார்
30) 17:43:49 ஆர்.நாராயணன்.
31) 20:29:28 வேதாந்தம்
32) 20:30:08 பத்மாசனி
33) 20:33:06 ராஜி ஹரிஹரன்
************************
Unknown said…
ரஷ்யத் தலைவர் என்று சொல்லித் தலையைக் குழப்பி விட்டிர்கள் :-)
புடின் கொண்ட ஒரு நாடு "புருன்டி"
சோ சாண்டியரின் அர்த்த சாஸ்திரம் ன்னு ஒரு சுலோகம் போட்டார் ஒவ்வொரு வாரமும் எங்கே பிராமணன் துக்ளக்கில் தொடர்கதையா வந்த பொது. அந்த சம்பவம் ஏனோ ஞாபகம் வருது ;-)
சாண்டில்யர்
Raji said…
நானும் புடின் லெனின் கோபர்சேவ் ஸ்டாலின் என்று ஊர் சுற்றி விட்டு பாரதம் வந்தடைந்தேன்.
Vanchinathan said…
@ ராஜி ஹரிஹரன்: இப்படி விசா இல்லாமல் பல ஊர்களைச் சுற்றிப் பார்க்கும்போது மாட்டினால் என்னால்தான் என்று என் தலையை உருட்டாமலிருந்தால் சரி.
Sundar said…
"கௌடில்யர்" என்று ஞாபகம். பின்னால் சோ அதைப்பற்றி எழுதும் வரை யாருக்கும் சந்தேகம் வரவில்லை! :-)
கௌடில்யர் தான், சாண்டில்யர் இல்லை. கொஞ்சம் கவன பிசகு.
இப்போ கூட யாருக்கும் சந்தேகம் வரவில்லை போல இருக்கு.
Muthu said…
கௌடில்யரையும் சாணக்கியரையும் கலந்து சாண்டில்யர் உருவானார்!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்