Skip to main content

விடை 3286

இன்று (23/4/2018) காலை வெளியான வெடி:
தோண்டுபவர் அவர்  கால் வெட்டிப் புதைத்தார் சிதைத்தார் வாழ்க (5)

இதற்கான விடை: அகழ்வார்  = அர் (அவர் - வ) + வாழ்க உள்ளே சிதைந்து புதைந்துள்ள‌து.

அகழுதல் என்றால் தோண்டுதல். கோட்டை மதிற்சுவரையொட்டி மேலும் பாதுகாப்புக்காக சுற்றிலும் நீர்நிலையிருக்கும். பள்ளம் தோண்டி உருவாக்கப்பட்ட அதை அகழி என்பார்கள்.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்வதை அகழ்வாராய்ச்சி என்றே கூறப்படுகிறது.
கொலைக் கதை ஆசிரியை அகதா கிறிஸ்டி ஒரு தொல்பொருள் நிபுணரை மணந்து அதனால் உண்டான நன்மை என்று கூறியது: "பழமையானதை என் கணவர் விரும்புவதால் ஒரு வசதி, எனக்கு வயது ஏற ஏற என்மேல் அவருக்கு ஆசை அதிகமாகிறது."

திருக்குறள்:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த‌ல் தலை

---------

இரண்டாமாண்டு அடியெடுத்து வைத்த உதிரிவெடிக்கு வாழ்த்து தெரிவித்த எல்லோருக்கும்
நன்றி. இங்கே பங்கேற்பதற்குக் காசு பணமில்லை.  ஆர்வமுள்ள நண்பர்களை, உறவினர்களைப் புதிருக்கு அறிமுகப்படுத்துங்கள்.
 



Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

1) 6:04:51 ராமராவ்
2) 6:05:16 கேசவன்
3) 6:06:20 கி.பாலசுப்ரமணியன்
4) 6:07:23 இரா.செகு
5) 6:09:20 ஆர்.நாராயணன்.
6) 6:09:48 எஸ்.பார்த்தசாரதி
7) 6:12:29 நாதன் நா தோ
8) 6:16:52 லட்சுமி சங்கர்
9) 6:20:42 சித்தன்
10) 6:34:00 ரவி சுந்தரம்
11) 6:35:49 சுந்தர் வேதாந்தம்
12) 6:42:54 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 6:44:05 எஸ் பி சுரேஷ்
14) 6:44:16 வானதி
15) 6:50:33 மீனாக்ஷி கணபதி
16) 6:55:19 கு.கனகசபாபதி, மும்பை
17) 7:12:16 தி பொ இராமநாதன்
18) 7:23:18 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:30:04 லதா
20) 7:31:11 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
21) 7:31:57 மைத்ரேயி சிவகுமார்
22) 7:34:18 ரவி சுப்ரமணியன்
23) 8:35:49 மு க பாரதி
24) 8:47:49 ஏ.டி.வேதாந்தம்
25) 8:48:16 பத்மாசனி
26) 8:52:29 அனுராதாஜெயந்த்
27) 9:35:02 வித்யா ஹரி
28) 10:32:52 கோவிந்தராஜன்
29) 11:26:50 ரமணி பாலகிருஷ்ணன்
30) 12:42:07 ராஜி ஹரிஹரன்
31) 12:47:11 ஆர் .பத்மா
32) 12:55:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 14:03:36 ராதா தேசிகன்
34) 14:30:55 சாந்திநாராயணன்
35) 14:31:35 விஜயா ரவிஷங்கர்
36) 16:32:44 மீனாக்ஷி
37) 18:13:43 ரா. ரவிஷங்கர்
38) 18:33:19 பாலா
39) 20:55:42 அம்பிகா

************************
A small poll. Among the regular readers, how many are within driving distance of Pittsburgh, Philadelphia, Washington DC and New York?
Unknown said…
உதிரி வெடிக்கும் , திரு. வாஞ்சிக்கும் அன்பார்ந்த 🙏🏻🙏🏻.
எங்கள் தந்தையார் மூலம் உ.வெ யின் அறிமுகம் கிடைத்தது. உதிரி வெடி , சில சமயம் ஊசி வெடியாய் மனதில்உ
டனே வெடிக்கும், சில சமயம் என்னதான் பத்தவைத்தாலும் வெடிக்காத மாதிரி பாவலா காட்டி , கடைசியில் அணுகுண்டு போல டமால் என்று விடை கிடைக்கும் , சில சமயமோ ... மற்ற வேலையெல்லாம் விட்டு புஸ்வானமாய் போன புதிரை எண்ணி.. விடை கிடைக்காமல்..சே... இது நமக்கு தேவையா என்று நொந்து நூடில்ஸ் ஆன புதிர்களும் உண்டு . மறுநாள் விடை பார்த்து ..அட இவ்வளவு எளிமையான புதிரை நமக்கு விடுவிக்க முடியவில்லை என்று தலையில் அடித்து கொண்டதும் உண்டு. மறந்து போன பல வார்த்தைகளை மீண்டும் ஞாபகம்படுத்தியதிர்க்கும் .. தெரியாத பல புதிய வார்த்தைகளை இணையதளத்தில் ‘அகழ்வாரா’ச்சி செய்து அறிமுகப்படுத்தியதிர்க்கும்...
உங்கள் விசிறியின் நன்றிகள் பல.
- மைத்ரேயி சிவகுமார் .




Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்