Skip to main content

விடை 3274


இன்று (11/04/2018) காலை வெளியான வெடி:
செயல்பட முடியாமல் தடுமாற்றம் திட்ட வேண்டாம் தலைபோனாலும் மாற்றிவிடுகிறேன் (6)
இதற்கான விடை: திண்டாட்டம் = திட்ட (வே)ண்டாம்.


சில நாட்களுக்கு முன் திண்டாட்டம் புதிர்களுடன் நான் நிறையத் திண்டாட வேண்டியிருந்தது. அப்புதிர்கள் எல்லாம் சும்மா வார்த்தை விளையாட்டுகள் அல்ல.   கைதிகளின் திண்டாட்டம் என்று  இரண்டு கைதிகளிடம் விசாரிக்கும் காவலர்கள் இருவரையும் தனித்தனியாக மற்றவர் மீது பழி சுமத்தச் சொல்லி தண்டனையைக் குறைக்க உபாயமாகச் சொல்கின்றனர்.
காவலரை நம்புவதா, வேண்டாமா? இது பொருளாதாரக் கொள்கையை விளக்கும் புதிர்.
  இது போன்ற பல புதிர்கள் மட்டுமின்றி பல ஆழமான அறிவியல் சிந்தனைச் சோதனைகளை சுந்தர் வேதாந்தம் பல கட்டுரைகளாக எழுதி நூலாக வெளியிட்டுள்ளார்.

அதில்  தொலைக்காட்சிப் போட்டிகள், அறிவியல், கணிதம்,  என பலவற்றைத் தெளிவான தமிழில்  சுந்தர் வேதாந்தம் விளக்கியுள்ளார். அவற்றின் மூலம் தமிழும் எனக்கு விரிவடைந்தது bias என்ற  சொல்லுக்குக் கோடல் என்ற அழகான தமிழ்ச் சொல் அதில் கற்றேன்.
உதிரிவெடி மாதிரி  விளையாட்டைவிட சுவாரசியமானவை, அப்புதகம் விளக்கும் விஷயங்கள். பிரயோஜனமும் உள்ளவை!






சுந்தர்  அடிக்கடி இப்புதிர்ப் பக்கம் வருபவர்.   அந்த நூலை எப்படி வாங்குவது என்று கருத்துரையில் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். (எனக்கு அவர் அந்நூலைப் பரிசாக அனுப்பிவிட்டதால் அதை எப்படி வாங்குவது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை!)

ரவி சுப்ரமணியனின் கருத்தைக் கண்டு சேர்க்கப்பட்டது:
இந்நூலை வாங்குவதற்கு செல்ல வேண்டிய இடம் https://solvanam.com/?p=49646

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (43):

1) 6:02:41 இரா.செகு
2) 6:05:12 லதா
3) 6:06:37 மீனாக்ஷி கணபதி
4) 6:06:51 எஸ்.பார்த்தசாரதி
5) 6:07:49 ஆர். பத்மா
6) 6:09:13 ராஜி ஹரிஹரன்
7) 6:11:42 கி. பாலசுப்ரமணியன்
8) 6:13:12 சதீஷ்பாலமுருகன்
9) 6:15:13 சங்கரசுப்பிரமணியன்
10) 6:20:02 ரவி சுப்ரமணியன்
11) 6:20:42 ரா. ரவிஷங்கர்..
12) 6:23:44 ருக்மணி கோபாலன்
13) 6:24:52 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:31:22 கேசவன்
15) 6:42:41 முத்துசுப்ரமண்யம்
16) 6:45:35 எஸ் பி சுரேஷ்
17) 6:46:44 செந்தில் சௌரிராஜன்
18) 6:48:46 வானதி
19) 7:01:19 சித்தன்
20) 7:02:05 அம்பிகா
21) 7:27:20 சுந்தர் வேதாந்தம்
22) 7:49:10 ரமணி பாலகிருஷ்ணன்
23) 8:05:49 ஸௌதாமினி
24) 8:07:33 ஆர்.நாராயணன்.
25) 8:19:11 பானுமதி
26) 8:57:30 மீனாக்ஷி
27) 9:02:21 புவனா சிவராமன்
28) 10:07:59 ராமராவ்
29) 10:22:06 கே.ஆர்.சந்தானம்
30) 11:18:50 விஜயா ரவிஷங்கர்.
31) 11:59:15 வித்யா ஹரி
32) 12:00:24 கல்பனா
33) 12:30:33 மீ பாலு
34) 12:57:31 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
35) 14:21:58 சுபா ஸ்ரீநிவாசன்
36) 14:31:46 லக்ஷ்மி ஷங்கர்
37) 16:12:37 ரவி சுந்தரம்
38) 18:14:14 ஏ.டி.வேதாந்தம்
39) 18:14:45 பத்மாசனி
40) 18:16:46 அனுராதா ஜெயந்த்
41) 19:09:19 மீ கண்ணன்
42) 19:18:23 மைத்ரேயி சிவகுமார்
43) 19:49:50 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
************************
இதற்கு என்ன விளக்கம் :
"தலைபோனாலும் மாற்றிவிடுகிறேன்"
Unknown said…
வேண்டாம் தலை போனால் "ண்டாம்". மாற்றிப்போடவேண்டும்.

சொல்வனம் வலைப்பதிவில் உள்ள இப்பக்கம் https://solvanam.com/?p=49646 வேதாந்தம் அவர்களின் புத்தகத்தைப் பற்றிய விவரங்களையும், அதை வாங்குவதற்கான அமேசான் இணைப்பையும் அளிக்கிறது.
Sundar said…
வாஞ்சி அவர்களுக்கு (ரவி சுப்ரமணியன் அவர்களுக்கும்தான்) என் மனமார்ந்த நன்றிகள்.

மின்புத்தகம் சென்ற வருடம் வெளி வந்தபோது விற்ற பிரதிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே காகித வடிவில் புத்தகத்தை வெளியிட்டபோது, விரலை சுட்டுக்கொள்ள வேண்டாம் என்று, நூறு பிரதிகள் மட்டும் சொந்தசெலவில் அச்சிட்டு பள்ளி/கல்லூரி நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினேன்.

https://solvanam.com/?p=49646 கட்டுரையில் சொன்னதுபோல், லாபநோக்கம் ஏதுமின்றி செய்யப்பட்ட முயற்சி இது. உதிரிவெடி வாசகர்கள் விரும்பினால் கூகுள் (https://goo.gl/5qufqJ) அல்லது அமேசான் (https://goo.gl/vzaD3f) தளங்களில் இருந்து இப்போதும் மின்புத்தகத்தை வாங்கலாம். என்றாவது ஏதாவது லாபம் வந்தால் சொல்வனம் இணையதளத்துக்கு அதை நன்கொடையாக கொடுத்து விடுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

காகித பிரதிகளை விற்க இதுவரை முயற்சிக்கவில்லை என்பதால், நிறைய பிரதிகள் பாக்கி இல்லை. ஒருவேளை காகித பிரதிகளுக்கு நிறைய தேவை இருந்தால், திரும்ப ஒரு முறை அச்சடிக்கவும் செய்யலாம். பணம் பண்ணுவது நோக்கமில்லை என்பதால், புத்தகம் நிறையப்பேரை சென்றடைவதுதான் இங்கே ஒரே குறிக்கோள். எனவே வேறேதும் யோசனைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி.
-சுந்தர்.
நான் பள்ளிக்கூடம போனபோது முத்து காமிக்ஸ் அப்புறம் கல்கண்டு தவிர வேறு எதுவும் இல்லை தமிழில் பொது அறிவை வளர்த்துக்கொள்ள. இம்மாதிரி புத்தகங்களை விரும்பி பைட்ப்பவர்கள் வெகு விரைவில் ஆங்கிலத்தில் படிக்க தொடங்கி விடுகிறார்கள். எனவே தொடர்ந்து தமிழில் எழுத பதிப்பிக்க ஆதரவு இல்லாமல் போகிறது.
Sridharan said…
நன்றி. புத்தகத்தை வாங்கிவிட்டேன்.
Sundar said…
நன்றி ஸ்ரீதரன்.
வாஞ்சி உதிரிவெடி பக்கங்களுக்கு சுமார் 200 பேர் தினமும் வருவதாக சொன்ன ஞாபகம். மொத்தமாக 1 பிரதி விற்றிருப்பதால், நீங்கள் இருநூற்றில் ஒருவர் என்று சொல்லி வாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். :-) :-)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்