Skip to main content

விடை, 3271

இன்று (8/4/2018) காலை வெளியான வெடி

நேராகக் கிழிக்கப்படுவதா அங்கி? தலைப்பு கிழிந்த உடுக்கையுடன் கிராமத்தில் தொழில் செய்பவன் (4)
இதற்கான விடை: கோடாங்கி
நேராகக் கிழிக்கப்படுவது கோடு. (காகிதத்தில் வரையப்படும். ஆனால் மணலில் விளையாட, கோடு  கிழிக்கப்படும்). கேள்விக்குறியால் கோடா.  தலைப்பு கிழிந்த அங்கி = ங்கி.

உடுக்கையுடன் வந்து பல பாட்டுகள் பாடி பயமுறுத்தி பேயை விரட்டச் செய்பவனைக் கோடாங்கி என்கிறார்கள். கோடங்கி என்றும் எழுதுகிறார்கள். புதிருக்கு இது வசதியாக இருப்பதாலும், கருவாச்சிக்குப் பேயோட்டுபவனை வைரமுத்து அப்படிக் குறிப்பிட்டதாலும் கோடாங்கி என்பதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

வைரமுத்து ப‌ல விவரங்களை அக்கதையில் (அவரது பார்வையில் காவியம்) வியக்கவைக்கும்படி விவரிக்கிறார். எந்த மரத்தில் உடுக்கை செய்வார்கள் (நான்கு மரங்களைக் குறிப்பிட்டார் அதில் ஒன்றான மஞ்சனத்தி என்பது மட்டும்தான் இப்போது எனக்கு ஞாபகம் இருக்கிரது. மஞ்சனத்தி என்பதை எங்கள் ஊர்பக்கம் நுணா மரம் என்பார்கள்).

மாட்டின் தோல் இல்லை வயிற்றிலிருந்து கறியை நீக்கிய‌ பாகம்தான் கட்டுவார்கள். அதை ஒட்ட புளியங்கொட்டையை ஊறவைத்து அரைத்து அதையே பசையாகப் பயன்படுத்துவார்கள் என்று போகும்.   மிகவும் பிரமிப்பூட்டும்படி மதுரை, தேனி பக்கத்து கிராமத்தைப் பதிவு செய்யும் நூல் கருவாச்சிக் காவியம்.


கோடங்கி என்ற விடைக் கொடுத்த‌வர்க்கு இரண்டு நட்சத்திரங்களும், கோணங்கி என்ற விடையை முற்றிலும் நிராகரித்தும் இன்றைய பட்டியலை வெளியிடுகிறேன்.

  6:05:10    எஸ்.பார்த்தசாரதி    ***
  6:06:22    வீ.ஆர்.  பாலகிருஷ்ணன்*   
  6:11:54    லக்ஷ்மி ஷங்கர்***
  6:41:56    ரா.  ரவிஷங்கர்**
  6:42:00    விஜயா ரவிஷங்கர்**    
  6:56:00    பானுமதி***    
  7:01:22    மீனாக்ஷி கணபதி***
  7:06:27    ராஜி ஹரிஹரன்**
  7:37:45    கேசவன் ***
  7:38:15    ரவி சுப்ரமணியன் ***
  8:35:01    சதீஷ்பாலமுருகன்   
  10:16:31    மீனாக்ஷி*
  13:07:16    லட்சுமி மீனாட்சி ***   
  13:16:13    கு.கனகசபாபதி, மும்பை **
  14:21:13    மு.க.இராகவன். **
  14:53:11    சுபா ஸ்ரீநிவாசன்**         
  15:55:55    கி. பாலசுப்ரமணியன் ***
  15:57:48    மீ பாலு*   
  19:39:34    மைத்ரேயி சிவகுமார்***

Comments

Raghavan MK said…

கோடங்கி, கோடங்கி இரண்டுமே வழக்கில் உள்ளவை!
Three stars to be awarded for கோடங்கி also!


Wikitionary

கோடங்கி
தமிழ் ஒலிப்பு பொருள் கோடங்கி, பெயர்ச்சொல். உடுக்கு உடுக்கினை அடித்துக் கொண்டே குறி சொல்பவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a small drum a soothsayer who
903 bytes (39 சொற்கள்) - 12:54, 23 ஆகத்து 2012
Raghavan MK said…


University of Madras Lexicon

கோடங்கி

kōṭaṅki n. 1. A small hand-drum; உடுக்கை Tj.

2. Soothsayer who uses the udukkai.
Vanchinathan said…
நன்றி மு.க.ராகவன்: கோடாங்கியை நான் கதையில்தான் படித்திருக்கிறேன். அகராதியில் தேடிப் பார்த்ததில்லை. அதனால் உடுக்கை என்ற பொருளிருப்பது இப்போதுதான் தெரிகிறது.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.